அர்ஜுன் இயக்கிய லாபமும் நஷ்டமும் அடைந்த படங்கள்.. 60 வயதிலும் லியோ சித்தப்பா செய்யும் அக்கப்போரு!

Action King Arjuns hit and flop movies in tamil cinema: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி  மாபெரும் வெற்றியுடன் சிறப்பான வசூலை ஈட்டியது. அதில் விஜய்க்கு சித்தப்பாக ஹெரோல்டு தாஸ் கேரக்டரில் நடித்தது ஆக்சன் கிங் அர்ஜுன். 40 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் காலூன்றி இருக்கும் அர்ஜுன் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார்.

மறைந்த நடிகர் புரூஸ்லீயின் என்டர் தி டிராகன் படத்தின் ஈர்ப்பால் கராத்தே மற்றும் குங்ஃபூ கலையில் ஆர்வம் மிகுந்த அர்ஜுன் பெரும்பாலும் ஆக்சன் படங்களையே விரும்பி நடித்து உள்ளார். சாதாரண கதையாக இருந்தாலும் சென்டிமென்டாக ஆக்சன் சீன் வைத்து விடுவது இந்த ஆக்சன் கிங்கின் வழக்கமாம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் என்றாலே 90ஸ் காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் ஆக்சன் கிங் நடித்த தேசப்பற்று படங்கள் இடம்பெறாமல் போவதில்லை. ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் திறமையான நாலு போராளிகளுடன் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிப்பதாக அமைந்த ஜெய்ஹிந்த் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Also read : காந்தி போல உத்தமனாக வாழும் 5 நடிகர்கள்.. இப்பவும் இளமை துள்ளலோடு இருக்கும் ஆக்சன் கிங்

ஜெய்ஹிந்த் படத்தின் ஹிட்டான தாயின் மணிக்கொடி பாடலை தலைப்பாக வைத்து 1998 வெளிவந்த ஆக்சன் கிங் மற்மொரு அதிரடி திரைப்படம் தாயின் மணிக்கொடி. இப்படத்தின் நாயகி படம் வெளிவருவதற்கு முன்பே கேட்வாக்கில் ஈடுபட்டிருக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து கோமாவில் இருந்தபடியே இறந்து போனார்.  படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூலையும் வாரி குவித்தது. இதே போன்ற ஏழுமலை, சேவகன், பிரதாப் போன்ற படங்களும் ஆக்சன் கிங்கிற்க்கு லாபத்தை வாரி கொடுத்த தேசப்பற்று மற்றும் ஆக்சன் கலந்த அதிரடி படங்கள் ஆகும்.

ஜெய்ஹிந்த் வெளியான 20 வருடங்களுக்குப் பின் ஜெய்ஹிந்த் 2 கல்விக்காக பாடுபட்டது போன்ற கதை இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் தோல்வியை தழுவியது. அது போன்று இவன் நடிப்பில் வெளியான துரை, வாத்தியார் போன்ற படங்களும் இன்றைய தலைமுறையில் எடுபடாமல் போயின.

சமீபத்தில் மோடியை சந்தித்த ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தான் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.  60 வயதை கடந்தாலும் தான் கமிட்டாகும் படங்களில் குணச்சித்திர கேரக்டர் ஆனாலும் ஆக்சன் காட்சிகள் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் இந்த ஆக்சன் கிங்.

Also read: விஜய் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா.? ஒரு ஓட்டு கூட தேறாது, எச்சரிக்கும் விசுவாசிகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்