சிங்கத்தோட பிடரில சீப்பு வச்ச ஹீரோ.. ஹரியை டென்ஷனாக்கி சீண்டி பார்த்த 4 எழுத்து நடிகர்

Director Hari: ஒவ்வொரு இயக்குனருக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும். அதில் ஹரி படங்கள் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து இருக்கும். அப்படி ஒரு பாணியில் வெளியான ரத்னம் இப்போது கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும் ஹரி இப்போது இருக்கும் ட்ரெண்டுக்கு மாற வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்நிலையில் 4 எழுத்து ஹீரோ ஒருவர் இவரை டென்ஷன் ஆக்கிய விவரமும் தெரிய வந்துள்ளது.

இதை வலைப்பேச்சு அந்தணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இருந்தபோது ஹரியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஹீரோ மீது கோபப்பட்ட ஹரி

அப்போது ரோஜா கூட்டம் போன்ற வெற்றி படங்களை அவர் கொடுத்திருந்த சமயம். அதே போல் ஹரியும் சாமி பட ரிலீசில் பிஸியாக இருந்திருக்கிறார்.

அப்போது ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இவர்கள் கூட்டணி இணையும் படம் உறுதியாகி இருக்கிறது. சாமி வெளிவந்தவுடன் இந்த படம் சூட்டிங் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால் ஹரி ஹீரோவிடம் கதை கூறாமல் இருந்தாராம். இதனால் அவர் அந்தணனை அனுப்பி கதை பற்றி கேட்டு வாங்க என சொல்லி இருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் அவசர புத்தி

அப்போது அவர் ஹரி கொஞ்சம் ஒரு மாதிரி. இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த் அடம் பிடிக்கவே இவர் போய் கேட்டிருக்கிறார்.

உடனே டென்ஷனான இயக்குனர் தயாரிப்பாளருக்கு போன் செய்து இந்த படம் டிராப் என கூறியிருக்கிறார். மேலும் இனிமேல் ஸ்ரீகாந்தை வைத்து நான் படம் பண்ண மாட்டேன் என்றும் கோபப்பட்டு இருக்கிறார்.

ஏனென்றால் எந்த இயக்குனரும் கதை சொல்லாமல் சூட்டிங் செல்ல மாட்டார்கள். நான் பல விஷயங்களை கதையில் யோசித்து வைத்திருக்கிறேன்.

அப்படி இருக்கும்போது இந்த சின்ன விஷயம் கூட தெரியாத அவரை வைத்து நான் படம் எடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படியாக பெரிய வாய்ப்பு ஸ்ரீகாந்தை விட்டு நழுவி போயிருக்கிறது.

ஆனால் அப்போது அவர் அதை ஈசியாக எடுத்து இருக்கிறார். பின்னர் சாமி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தவுடன் அவர் மிகவும் வருத்தப்பட்டாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்