சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

காந்தி போல உத்தமனாக வாழும் 5 நடிகர்கள்.. இப்பவும் இளமை துள்ளலோடு இருக்கும் ஆக்சன் கிங்

Teetotaller Actors in kollywood: அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நபரை பார்ப்பதே சவாலான ஒரு விஷயம், அதுவும் சினிமாவில் பார்ப்பது அபூர்வம். பெரும்பாலும் சினிமா துறையில் இருப்பவர்கள் , உல்லாசமாக எல்லாவித பழக்கங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதில் சிலர் விதி விலக்காக, எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் சுத்தமான டீ டோட்டலராக இருந்த 5 பிரபலங்கள் யார் என பார்க்கலாம்.

செந்தில்: தமிழ் திரைப்பட நகைச்சுவைகளில் தவிர்க்க முடியாத ஒருவர் செந்தில். குறிப்பாக கவுண்டர் மணி, செந்தில் இடையில் உள்ள கெமிஸ்ட்ரி பயங்கர வெற்றியை திரைப்படங்களுக்கு தேடி கொடுக்கும். இவர் 100 திரைப்படங்களுக்கு மேலே நகைச்சுவை நடிகராக நடித்து வலம் வந்திருக்கிறார். இருப்பினும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் சுத்தமானடீ டோட்டலராகவே இருந்து இருக்கிறார்.

Also Read:விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன வர்மன்.. இயக்குனராக எடுக்கும் புது ஆதாரம்

சிவக்குமார்: 60களில் ஆரம்பித்து 2000 வரை பீக்கில் இருந்த ஹீரோக்களில் ஒருவர் சிவகுமார்.சமூக சேவைகளிலு,ம் ஊக்கமளிக்கும் பேச்சுகளினால் நன்கு அறியப்பட்டவர். கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தீவிரமாக கடைபிடிக்கும் நபர். குடும்ப சூழ்நிலையை மிகவும் மதிப்பவர் என்பதனாலேயே குடி போன்று எந்தவித போதைப் பழக்கமும் இல்லாமல் ஒழுக்கமோடு,  பிறருக்கு முன்னோடியாக திகழும் வகையில் உத்தமனாக வாழ்பவர்.

சிவகார்த்திகேயன்: 2கே கிட்ஸ்களின் ரெமோவாக திரை உலகில் கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். தனது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு மேலே வந்ததால், சந்தித்த கஷ்டங்கள் உணர்ந்து எந்த ஒரு சூழ்நிலையிலும் கெட்ட பழக்கங்கள் அடிமையாகாமல், தனது குடும்பத்திற்காக டீ டோட்டலராகவே தற்போது வரை கடினமாக உழைத்துக் கொண்டிருப்பவர்.

Also Read:சீரியலில் கதாநாயகியாக நடிக்க லிப்லாக் சீன் நிச்சயம்.. இயக்குனர் செய்த மட்டமான வேலை

பிரபு: என்னதான் அப்பா தமிழ் திரை உலகிலேயே மிக பெரிய நடிகராக இருந்தாலும் கூட, எந்த ஒரு ஆணவமும் திமிரு இல்லாமல் சகஜமாக பழகும் நடிகர் பிரபு. இவ்வளவு பெரிய குடும்பத்திலிருந்து வந்ததாலேயே , தனது குடும்பத்தின் பெயர் எப்போதும் கெட்டுப் போகக் கூடாது என்பதால் கவனமாக இருந்தார். அதுவே இவருக்கு எந்த ஒரு தீய பழக்கங்கள் மீது ஆர்வம் வராமல் இருப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

அர்ஜுன்: அர்ஜுன் நிறைய அடிதடி காட்சிகளை கொண்ட நீதிக்காக போராடும் விதத்தில் வெளியாகும் திரைப்படங்களில் பெரும்பாலும் நடிப்பதால் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரனார். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பயங்கர திரில்லிங் ஆகவும் பரபரப்புடனும் இருக்கும். இவர் எப்போதுமே தனது உடற்கட்ட அமைப்பு மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதனாலேயே இவர் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

Also Read:இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News