விக்ரம் பட வெற்றியால் தலைகால் புரியல.. பல இயக்குனர்களை கிடப்பில் போட்ட கமல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த நிலையில் 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் தொடர்ந்து அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல்லாக இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது கமலஹாசன் அதிகமாக தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் கமல் முழுவீச்சாக சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் ஒரு படத்தில் இணையுள்ளார். ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்கயுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிறமொழி படங்களை இயக்குவதிலும் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கமல் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அப்போது தன்னுடைய அடுத்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் விக்ரம் படத்தை போல கமலுக்கு மாபெரும் வெற்றிப் படத்தை இதுவரை எந்தப் படமும் கொடுத்ததில்லை. இதனால் கமல் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். அதாவது வயதான மற்றும் நடுத்தர இயக்குனர்களுக்கு தற்போது பட வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம்.

லோகேஷ் போன்ற இளைய இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என யோசித்து உள்ளாராம். ஏனென்றால் தற்போது உள்ள இயக்குனர்கள் எல்லா விஷயங்களிலும் அப்டேட்டாக உள்ளனர். அவர்களின் ரசனையும், ரசிகர்களின் ரசனையும் ஓரளவு ஒத்துப் போகிறது. இதனால் இந்த இளைய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என கமல் முடிவெடுத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்