ராஜமௌலியின் மீது கடும் கோபத்தில் ஆலியா பட்.. ஆர்ஆர்ஆர் படத்தால் வந்த சோதனை

ராஜமௌலியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ராஜமவுலியின் இயக்கத்தையும், நடிகர்களின் நடிப்பையும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படம் நாம் எதிர்பார்க்காத அளவில் விறுவிறுப்புடனும், மிக பிரம்மாண்டமாகவும் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஹீரோயின் ஆலியா பட் இயக்குனர் ராஜமவுலியை சமூக வலைத்தள பக்கத்தில் அன்பாலோ செய்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் ராஜமவுலி ஏமாற்றி விட்டதால் தான் அவர் இப்படி செய்ததாக தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சொல்லப்போனால் இப்படத்தில் ஆலியா பட் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற காட்சிகள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குமேல் அதை டெவலப் செய்தால் அவருடைய கேரக்டர் மொத்தமும் மாறிவிடும் என்பது தான் பலருடைய கருத்து.

அப்படி இருக்கையில் ஆலியா பட் ஏன் இப்படி செய்தார் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. மேலும் படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட சில நடிகர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு சற்று குறைவாக இருப்பது தான் உண்மை. இருப்பினும் கதையின் போக்கில் நல்ல விறுவிறுப்பு இருக்கிறது.

மேலும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரன் இருவரும் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஸ்கோர் செய்து விட்டதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் கதைக்கு தேவையில்லாத காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாததால் படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.