Connect with us
Cinemapettai

Cinemapettai

bhakiyalaxmi-gopi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோபி விட கேவலமாக நடந்து கொள்ளும் மகன்.. உடைந்துபோன பாக்யா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து ஆன பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி, தற்போது ராதிகா எப்போது தன்னை வீட்டுக்குள் சேர்த்துக் கொள்வார் என நடுரோட்டில் காரிலேயே தங்கியிருக்கிறார்.

மறுபுறம் பாக்யா வீட்டில் இருக்கும் அனைவரும், கோபி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பாக்யாதான் காரணம் என அவரை திட்டி தீர்க்கின்றனர். கோபிக்கு அடுத்தபடியாக குடும்ப பொறுப்புகளை மூத்த மகன் செழியன் எடுத்துக்கொண்டு குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என கோபியின் அம்மா ஈஸ்வரி செழியனிடம் சொல்கிறார்.

Also Read: வில்லி அவதாரம் எடுக்கும் ராதிகா!

உடனே செழியன் தனக்கும் தனது மனைவிக்கும் ஆகும் செலவை மட்டுமே மாதமாதம் வீட்டிற்கு கொடுக்க முடியும். அதைத் தவிர வேறு எந்த பணமும் என்னால் செலவழிக்க முடியாது என்று கோபியை விடக் கேவலமாக நடந்து கொள்கிறார்.

இதைக் கேட்டதும் பாக்யா உடைந்து போய் விடுகிறார். இப்படி குடும்ப பொறுப்புகளை ஏற்க மறுக்கும் மகனிடம் பத்து பைசா கூட வாங்கக்கூடாது என்ற வெறியுடன் தனது கேட்டரிங் தொழில் முழு கவனமும் செலுத்தி பணம் சம்பாதிக்க போகிறார்.

Also Read: 50 வயதில் புது மாப்பிள்ளையாக போகும் கோபி

ஏற்கனவே ஒரு வருடத்தில் கோபியிடம் 40 லட்சம் தருவதாக சவால்விட்ட பாக்யா, இளைய மகன் எழில் உதவியுடன் கேட்டரிங் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போகிறார். அதேசமயம் ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யா குடும்பத்தினர் வரிசையாக அவரை அவமானப்படுத்துவதால், கோபியை மன்னித்து ராதிகா ஏற்றுக்கொள்வதற்கு அது காரணமாக மாறிவிடுகிறது.

இதன்பிறகு ராதிகாவும் கோபியை 2-வது திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ போகின்றனர். முன்பு குற்ற உணர்ச்சியுடன் இருந்த ராதிகா இனிவரும் நாட்களில் பாக்யாவிற்கு வில்லியாக மாறி, கொடூரமாக தன்னுடைய ஆட்டத்தை ஆட போகிறார்.

Also Read: டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்!

Continue Reading
To Top