அஜித் படத்தால் மௌண்ட் ரோட்டுக்கு வந்த சோதனை.. பிரம்மாண்டமாக உருவாகும் AK61

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏ கே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஸ்டேடியத்தில் ஒரு மிகப்பெரிய செட் போடப்பட்டு இருக்கிறது.

பிரம்மாண்டமாக இருக்கும் அந்தத் செட் கிட்டத்தட்ட 9 ஏக்கருக்கு தொடர்ந்து போடப்பட்டிருக்கிறதாம். அந்த ஒன்பது ஏக்கரிலும் பிரம்மாண்டமான ஒரு பேங்க் தயாராகி கொண்டிருக்கிறதாம். ஒரு பேங்கிற்கு இவ்வளவு பிரம்மாண்டமான செட்டா என்று பலருக்கும் வியப்பாக இருக்கலாம்.

ஆனால் இந்த பேங்கை வைத்துதான் மொத்த கதையும் நகரும் படி எடுக்கப்பட இருக்கிறதாம். கதைப்படி இப்படம் முழுக்க முழுக்க பாங்கில் நடக்கும் ஒரு திருட்டைப் பற்றி தான் உருவாக்கப்பட்டு வருகிறது. அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது.

இதற்காக தயாரிப்பாளர் போனி கபூர் ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்திருக்கிறார். இந்த பேங்க் மௌண்ட் ரோட்டில் தான் இருக்கிறதாம். அதனால் தயாரிப்பாளர் அந்த மௌண்ட் ரோட்டையே மொத்தமாக செட்டாக போட்டு படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார். அதற்காகத்தான் ஹைதராபாத்தில் இவ்வளவு பெரிய செட்டை போட்டு படத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படக்குழுவினரும் இந்த காட்சிகளுக்காக நிறைய மெனக்கெட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் மிகவும் யதார்த்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஹைதராபாத்தில் இப்படி ஒரு பிரம்மாண்டமான மௌண்ட்ரோடு உருவாக்கிக் கொண்டு இருப்பதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் என்னப்பா இது மௌண்ட் ரோட்டுக்கு வந்த சோதனை என்று கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Next Story

- Advertisement -