விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் எப்போ வரணும்னு முடிவு பண்ண போறது விஜய் தான்.. இவங்க ஈகோ போட்டி வேற லெவல்ல இருக்கு!

Ajith Vijay
Ajith Vijay

Vidaamuyarchi First Look: அஜித்துக்கு கடந்த சில வருடங்களாகவே ஒரு படம் எடுத்து முடிப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது. அதிலும் விடாமுயற்சி படம் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட சிக்கல்தான். படத்தின் டைட்டில் தொடங்கி, சூட்டிங் வரை அஜித்தின் ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ஏங்கி கிடக்கிறார்கள். சென்னை மற்றும் அஜர்பைஜானில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தாலும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அஜித் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருவதால் அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. இருந்தாலும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியே வரும் என எல்லோரும் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் அந்த போஸ்டர் வெளியாவது விஜய் கையில் தான் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை லாக் செய்யப்போவது நடிகர் விஜய் தான். என்னதான் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை, நாங்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் என இவர்கள் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அந்த தீராத போட்டி இன்னும் இருந்து வருகிறது. அஜித் எனக்கென்ன என சுற்றிக் கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், அஜித்தை விட நான் ஒரு படி மேல் என்பதை நிரூபிப்பதற்கு நிறையவே முயற்சி செய்து வருகிறார்.

Also Read:தமிழக முன்னேற்ற கழகத்திற்கு விஜய் போட்ட 4 கண்டிஷன்.. பிசிறு தட்டாமல் பின்பற்றும் தமுக நிர்வாகிகள்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க போவது திட்டவட்டமாக உறுதியாகிவிட்டது. தமிழக முன்னேற்ற கழகம் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த கட்சியின் மாநாடு மதுரையில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க இருப்பதாக கூட செய்திகள் வெளியாகி விட்டது. விஜய் மட்டும் அந்த மாநாடு நடத்திவிட்டால் அன்றிலிருந்து அடுத்த ஒரு மாதத்திற்கு அவருடைய பெயர் தான் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும். தற்போது அதற்கு சூனியம் வைக்க தான் ஆட்சி முடிவெடுத்து இருக்கிறார்.

அஜித் மற்றும் விஜய்க்கு இடையே நடக்கும் போட்டி

விஜய் கட்சி அறிவிப்பை வெளியிடும் அதே நேரத்தில் தான் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடுவதற்கு அஜித் அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் அரசியல் அறிவிப்பை சொல்லும் அதே நாளில் தன்னுடைய கெத்தை சமூக வலைத்தளத்தில் காட்ட வேண்டும் என்பதுதான் அஜித்தின் தற்போதைய பிளான். இதனால்தான் விடா முயற்சி பர்ஸ்ட் லுக் தேதியை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.

விஜய்யின் மிகப்பெரிய பிளானை அஜித் சைலன்டாக முறியடிக்க திட்டமிட்டு வருகிறார். விஜய் கஷ்டப்பட்டு செய்யும் சில விஷயங்களை அஜித் ஈஸியாக செய்து ட்ரெண்டாகி விடுகிறார். இது நடிகர் விஜய்க்கு நன்றாகவே தெரியும். மொத்தத்தில் தங்களுடைய ரசிகர்களை கொம்பு சீவி விட்டு இருவரும் தங்களின் பலத்தை காட்டிக் கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய ரசிகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

Also Read:சரியான நேரத்தில் களம் இறங்கும் தளபதி விஜய்.. இத மட்டும் பாலோ பண்ணா சி.எம் சீட் கன்ஃபார்ம்

Advertisement Amazon Prime Banner