ஏவிஎம் தயாரிப்புடன் கூட்டணி அமைத்து எஸ். பி. முத்துராமன் கொடுத்த 6 ஹிட் படங்கள்.. ரஜினி, கமலை தூக்கி விட்டு அழகு பார்த்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆக இருந்தவர் தான் இயக்குனர் எஸ் பி முத்துராமன். அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் ரஜினி மற்றும் கமல் போன்ற டாப் ஹீரோக்களின் திரை வாழ்க்கைக்கு தனது படங்களின் மூலம் உறுதுணையாக இருந்தவர் என்றை சொல்லலாம். அப்படியாக ஏவிஎம் தயாரிப்புடன் கூட்டணி அமைத்து எஸ்.பி. முத்துராமன் அவர்கள் ரஜினி மற்றும் கமலுக்கு கொடுத்த ஆறு சூப்பர் ஹிட் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

முரட்டுக்காளை: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முரட்டுக்காளை. இதில் ரஜினிகாந்த் உடன் ரதி அக்னிகோத்ரி, ஜெய்சங்கர், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் ரஜினிகாந்த், காளையனாக ஜமீன்தார் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

Also Read: அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

போக்கிரி ராஜா: எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி ராஜா. இதில் ரஜினிகாந்த் உடன் ஸ்ரீதேவி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தை எஸ் பி முத்துராமன் இயக்கியிருந்தார். அதிலும் படத்தில் ரமேஷ் மற்றும் ராஜா என்னும் இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் தனது அசத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அது மட்டுமல்லாமல் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. 

சகலகலா வல்லவன்: கமல் நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். அதிலும் எஸ் பி முத்துராமன் இயக்கிய இப்படத்தில் கமலஹாசன், அம்பிகா, வி கே ராமசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதில் வேலு என்னும் கேரக்டரில் கமலஹாசன் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அது மட்டுமல்லாமல் இப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி மாபெரும் சாதனை படைத்தது.

Also Read: ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்

பாயும் புலி: ரஜினிகாந்த் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாயும் புலி. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ராதா, ஜெய்சங்கர், ஜஸ்டின், ஜனகராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதிலும் தனது தங்கையின் மீது அதீத பாசம் கொண்ட அண்ணனாக பரணி என்னும் கேரக்டரில் ரஜினி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தூங்காதே தம்பி தூங்காதே: உலக நாயகன் இரட்டை வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தூங்காதே தம்பி தூங்காதே. மேலும் இப்படத்தில் கமலஹாசன் உடன் ராதா, சுலக்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் கோபி மற்றும் வினோத் என்னும் இரட்டை வேடங்களில் கமலஹாசன் தனது தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அதுமட்டுமல்லாமல் இந்தப் படமானது பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் 275 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது.  

நல்லவனுக்கு  நல்லவன்: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன். இதில் ரஜினிகாந்த் உடன் ராதிகா, கார்த்திக், துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் குடும்பத்தின் மீது அதீந்த பாசம் கொண்டவராக ரஜினிகாந்த், மாணிக்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். மேலும்  இப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: ஷங்கரிடம் கரராக சொன்ன கமல்.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்தியன் 2 வில் செய்யும் புதிய முயற்சி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்