வில்லியாக நடித்து அட்ராசிட்டி செய்த 6 நடிகைகள்.. இப்ப வரைக்கும் பேசப்படும் நீலாம்பரி

கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளுக்கு அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல ஹீரோயின்கள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருக்கிறார்கள். அதிலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு வில்லத்தனத்தை காட்டிய நடிகைகளும் இருக்கிறார்கள். அப்படி வில்லியாக நடித்து அட்ராசிட்டி செய்த ஆறு நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

ரம்யா கிருஷ்ணன் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினிகாந்த், சௌந்தர்யா நடித்த அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் படு பயங்கர வில்லியாக நடித்திருப்பார்.

சூப்பர் ஸ்டாருக்கு இணையாக நடிப்பில் மிரட்டி இருந்த அந்த நீலாம்பரி கேரக்டர் இன்று வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. சொல்லப் போனால் அவரை பார்த்து தான் மற்ற ஹீரோயின்கள் வில்லி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனத்தை ஓவர் டேக் செய்ய இன்றுவரை வேறு யாரும் கிடையாது என்றே சொல்லலாம்.

Also read:நடிக்கவே தெரியாமல் ஓட்டிக்கொண்டிருக்கும் 6 நடிகர்கள்.. சுட்டு போட்டாலும் டான்ஸ் வராத சிவா

ரீமா சென் மின்னலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் போன்ற திரைப்படங்களில் வில்லியாக நடித்திருப்பார். அதிலும் இவர் வல்லவன் திரைப்படத்தில் சைக்கோ போன்று நடித்து அசத்தியிருப்பார். ஹீரோவுக்கு இணையாக இருந்த அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

ஸ்ரேயா ரெட்டி மலையாளம், தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் திமிரு திரைப்படத்தில் கொடூர வில்லியாக நடித்திருப்பார். ஆணுக்கு நிகராய் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு இவர் நடித்திருக்கும் அந்த காட்சியும், இவருடைய நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படி ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Also read:ஆர்யாவுக்கு மோசமான பெயரை வாங்கி கொடுத்த 5 படங்கள்.. கஷ்டப்பட்டு நடிச்சும் பிரயோஜனம் இல்லை

ஜோதிகா முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெண்ணாக அவர் நடித்திருப்பார். அவரிடமிருந்து இப்படி ஒரு வில்லத்தனத்தை ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவருடைய நடிப்பு பேசப்பட்டது.

வரலட்சுமி சரத்குமார் சர்க்கார், சண்டைக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் இவர் வில்லியாக நடித்திருக்கிறார். அதிலும் சண்டைக்கோழி 2 திரைப்படத்தில் கையில் அருவாளுடன் இவர் விஷாலுடன் சண்டையிடும் அந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் எந்தவிதமான கேரக்டராக இருந்தாலும் அதில் நடிப்பதற்கு தயாராகவே இருக்கிறார்.

திரிஷா கொடி திரைப்படத்தில் இவர் சைலன்ட் வில்லியாக நடித்திருப்பார். தனுஷ் இரு வேடங்களில் நடித்திருக்கும் அந்த படத்தில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அரசியலின் மேல் ஆர்வம் கொண்ட அவர் பதவிக்காக காதலித்த தனுசையே கொன்று விடுவார். மிகவும் சவாலான அந்த கேரக்டரில் நடித்திருக்கும் திரிஷா தற்போது அதே போன்ற கதைகளை ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்து வருகிறார்.

Also read:நடிகர்களை காமெடியில் ஓரங்கட்டிய வடிவேலுவின் 6 படங்கள்.. இப்பவரைக்கும் கொண்டாடப்படும் கைப்புள்ள கதாபாத்திரம்

Next Story

- Advertisement -