நடிக்கவே தெரியாமல் ஓட்டிக்கொண்டிருக்கும் 6 நடிகர்கள்.. சுட்டு போட்டாலும் டான்ஸ் வராத சிவா

எப்படியோ சினிமாவில் நுழைந்து விடும் ஒரு சில நடிகர்கள், நடிப்பு சுத்தமாகவே வராவிட்டாலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து திருப்தி அடைந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 5  நடிகர்களுக்கு படங்களில் நடிக்கவே தெரிய மாட்டேங்குது. அதிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு சுட்டுப்போட்டாலும் டான்ஸ் வரமாட்டேங்குது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி: முதல் முதலாக தமிழ்நாட்டில் தமிழ் சொல்லியல் இசைக்குழு குழுவான ‘ஹிப்ஹாப் தமிழா’ என்கின்ற இசைக்குழுவை துவங்கி, அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 போன்ற படங்களில் பாடகராகவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அதன்பிறகு ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு 2017 ஆம் ஆண்டு மீசையமுறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து டாப் ஹீரோ லிஸ்டில் வர நினைத்தார். ஆனால் அவருக்கு நடிப்பு சுத்தமாகவே எடுபடவில்லை. அதற்கு பதிலாக அவர் இசையமைத்துப் பாடுவதில் கவனம் செலுத்தியிருந்தால், தற்போது எட்டிப் பிடிக்காத இடத்திற்கு சென்றிருப்பார். ஆனால் ஹீரோவாக வேண்டும் எனப் பிடிவாதமாக அடுத்தடுத்த படங்களில் தோல்வியை சந்தித்தாலும் அதை விடுவதாக இல்லை.

Also Read: பெருமை பீத்திய ஹிப்ஹாப் தமிழா ஆதி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. தேவையா பாஸ்!

ஜிவி பிரகாஷ்: ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானின் அண்ணன் மகனான இவர், வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவருடைய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிலும் தல அஜித்தின் கிரீடம் படத்திற்கு இவருக்கு ஏக போக வரவேற்பு கிடைத்ததால், படு பிசியாக இருந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதன்பிறகு ஹீரோவாக டார்லிங் படத்தில் மிரட்டினார். சில அடல்ட் படங்களை தேடி தேடி நடித்துக்கொண்டிருந்த ஜிவி பிரகாசுக்கு இசையமைப்பாளராக கிடைத்த வரவேற்பு நடிகராக இருந்தபோது கிடைக்கவில்லை. ஏனென்றால் அவரது நடிப்பு அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது.

Also Read:  திருமணமான கையோடு சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த ஜிவி பிரகாஷ் நடிகை.. முன்கூட்டியே தெரிஞ்சிருச்சு போல

உதயநிதி ஸ்டாலின்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என வெவ்வேறு பரிணாமங்களில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக நடித்து பலருடைய கேள்வி கிண்டலுக்கு ஆளானார். அந்தப் படத்தில் அவருக்கு சுட்டு போட்டாலும் சுத்தமா டான்ஸ் வரல.

இருப்பினும் விடாப்பிடியாய் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் என அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து அசராமல் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு முழு நேரம் அரசியலில் ஈடுபடும் முடிவில் உதயநிதி இருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் தனது சினிமா பயணத்தை துவங்கிய இவர், அதன்பிறகு அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தாமாமா, பொறியாளர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைய நினைத்தார். அதன் பிறகு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தாலும் படத்தில் நடிப்பது அப்படியே தெரிவதால் இவரும் இந்த லிஸ்டில் வந்துவிட்டார்.

Also Read: சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

சிவா: ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இவர், அதன்பிறகு காமெடி படங்களில் நடித்திருந்தாலும் வெங்கட்பிரபுவின் சென்னை 600028, சரோஜா போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் என்கின்ற படத்திலும், தமிழ் படம் 2.0 என்கின்ற படத்திலும் நடித்து, இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களை அப்படியே காப்பியடித்து நடித்துக் காட்டியிருப்பார். இதனால் இவரைப் பார்த்தாலே சிலருக்கு எரிச்சல் வரும். அந்த அளவிற்கு கடுப்பேற்றும் படியே நடிப்பார்.

இவ்வாறு இந்த இந்த ஐந்து நடிகர்களும் நடிக்கவே தெரியாமல் சினிமாவில் ஒப்பேத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலருக்கு சுட்டு  போட்டாலும் நடனம், நடிப்பு இரண்டுமே வந்தபாடில்லை.

Next Story

- Advertisement -