ஆர்யாவுக்கு மோசமான பெயரை வாங்கி கொடுத்த 5 படங்கள்.. கஷ்டப்பட்டு நடிச்சும் பிரயோஜனம் இல்லை

எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் ஆர்யா தற்போது பல கதைகளை கேட்டு வருகிறார். இருப்பினும் இவருடைய சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்த வகையில் ஆர்யாவுக்கு மோசமான பெயர் வாங்கி கொடுத்த ஐந்து திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஓரம் போ: கடந்த 2007 ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரியின் இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. ஆட்டோ டிரைவராக ஆர்யா இப்படத்தில் நடித்திருப்பார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. மேலும் ஆர்யாவுக்கும் இப்படம் மூலம் ராசி இல்லாத நடிகர் என்ற பெயரும் அப்போது வந்தது.

Also read:ஆர்யாவின் கேப்டன் படம் எப்படி இருக்கு?. அனல் பறக்கும் விமர்சனம்

வேட்டை 2012 ஆம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரும் அளப்பறையுடன் வெளிவந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

சேட்டை கடந்த 2013 ஆம் ஆண்டு ஆர் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரட்டை அர்த்த வசனங்களும், சில முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் இப்படத்தில் அதிகமாக இருந்தது. அதன் காரணமாகவே இப்படம் படுதோல்வி அடைந்தது. ஆர்யாவுக்கும் இதன் மூலம் ஒரு கெட்ட பெயர் வந்தது.

Also read:அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

கஜினிகாந்த் 2018 ஆம் ஆண்டு சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இப்படம் வெளிவந்தது. ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த படமும் ஆர்யாவுக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

கேப்டன் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் சமீபத்தில் வெளியானது. ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்டிருந்த இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் ஆர்யா பெரிதும் எதிர்பார்த்த இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

Also read:வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

Next Story

- Advertisement -