fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

போதைக்கு அடிமையான 6 நடிகர்கள்.. உயிரையே விட்ட கலாபவன் மணி!

kalabavan-mani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போதைக்கு அடிமையான 6 நடிகர்கள்.. உயிரையே விட்ட கலாபவன் மணி!

சினிமாவின் பிரபலங்கள் என்றாலே அவர்களது அன்றாட நடவடிக்கை எப்படியாவது வெளியில் தெரிந்து விடும். அதிலும் அவர்கள் செய்யும் தீய பழக்கம் வெகு சீக்கிரமாகவே ரசிகர்களை வந்தடையும். இதனால் சிலர் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என நினைத்தாலும் ஒரு சிலர், அது தீய பழக்கமாகவே என்றாலும் அவர்களுக்குப் பிடித்ததை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல், அதனால் கெட்ட பெயர் வருவதையும் தோளில் போட்டுக்கொண்டு சுமக்கத் தயங்குவதில்லை. அப்படிதான் புகழின் உச்சத்தில் இருக்கும் 6 பிரபலங்கள் போதைக்கு அடிமையாகி, அதில் சிலர் தங்களை வாழ்க்கையையே கெடுத்துக் கொண்டனர்.

விஜயகாந்த்: தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கு மேல் 80, 90-களில் நடித்த இவர், 1991 ஆம் ஆண்டு இவர் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு கேப்டன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் தமிழில் சூப்பர் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், அனுதினமும் குடிப்பழக்கம் கொண்டவர், இதனால் நாளடைவில் இவரது உடல்நிலை மெலிந்து சினிமாவிற்குப் பிறகு அரசியலில் ஈடுபட்டாலும் தற்போது இரண்டிலுமே ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கலாபவன் மணி: தேசிய விருதை வாங்கிய பெருமைக்குரிய கலாபவன் மணி தெலுங்கு, மலையாள, தமிழ் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகராக ஏகப்பட்ட படங்களை வில்லன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, மிமிக்ரி ஆர்டிஸ்ட், நாட்டுப்புற பாடகர் ஆகவும் பன்முகத் திறமை கொண்ட இவர்., தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அனுதினமும் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டு கடைசியில் அந்த தீய பழக்கத்தினால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு எதிர்பாராத விதமாய் உயிரிழந்தார்.

கவுண்டமணி: 80, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக ரவுண்ட் கட்டிக்கொண்டிருந்த இவர், தினமும் குடித்து தன்னுடைய உடலை கெடுத்துக் கொண்டார். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக இவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது 83 யதுடைய கவுண்டமணி கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடித்ததற்கு பிறகு அவரால் எந்த படத்திலும் நடிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த்: திரைத்துறையில் ஜாம்பவானாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். 71 வயதிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தனக்கென ஒரு ஸ்டைல் வைத்து அதை யாராலும் அடித்துக்கொள்ள முடியாத தனித்துவம் வாய்ந்தவர். இந்திய சினிமாவின் கடவுளாக பார்க்கப்படும் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக இருக்காமல் 1988 ஆம் ஆண்டு முதல் இருந்தே அனுதினமும் குடிப்பது, புகை பிடிப்பது என தன்னுடைய உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் ஆண்டிற்கு ஒரு முறை சூப்பர் ஹிட் படம் வெளியாவது வழக்கம். அப்படி இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படம், அதைத்தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள தலைவர் 169 திரைப்படம் என ரசிகர்கள் இவருக்கு அமோக ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜயகுமார்: நாட்டாமை என்றாலே மனதிற்கு தோன்றும் முகம் விஜயகுமார். அந்த அளவிற்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஒன்றித்து தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிக்காட்டும் விஜயகுமார். 80, 90-களில் இருந்து சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். இவர் தினம்தோறும் குடிக்கும் பழக்கத்தை கொண்டவர். ஆனால் முருகனுக்கு மாலை போடும் போது மட்டுமே இந்தப் பழக்கத்தை தள்ளி வைப்பார்.

விஜய் சேதுபதி: தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை வேற லெவலுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எந்த கேரக்டரில் வேணாலும் நடிக்கத் தயார் என அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டும் விஜய் சேதுபதிக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஆனால் அவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்காமல் விஜய்சேதுபதி தினமும் குடிக்கும் பழக்கத்தை உடையவராக இருக்கிறார். இதை அவருடைய கண்களை வைத்தே கணித்து விடுகின்றனர். இருப்பினும் இவரால் கட்டுப்படுத்த நினைத்தாலும் அவருக்கு கை நடுக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு இந்த ஆறு சினிமா பிரபலங்கள் தினமும் குடிப்பழக்கம் உடையவர்கள் என்பதை அறிந்த ரசிகர்கள் கலைத்துறையில் இருக்கும் இவர்கள் இந்த தீய பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Continue Reading
To Top