இந்த வார ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்.. பிரபு தேவா பயமுறுத்தும் சீரியல் கில்லர் மூவி

இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸுக்காக மொத்தம் ஐந்து படங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி இருக்கும் திரைப்படம். சீரியல் கில்லரில் தொடங்கி அடல்ட் மூவி வரை ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

அயோத்தி : இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த திரைப்படம் அயோத்தி. ஒரு இறப்பு மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் டிரைலர் காட்சிகளே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள் அதிகமாக கவனத்தை ஈர்த்தது.

Also Read: யூகிக்க முடியாத சூப்பர் ஹிட் பட கதையில் சசிகுமார்.. சந்தானம் சொன்ன மாதிரி பொங்கலுக்கு வடகறி தான்

அரியவன்:யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹரிடம் உதவி இயக்குனராக இருந்த இயக்குனர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அரியவன் திரைப்படத்தில் புது முகங்கள் நவீன் மற்றும் ப்ரணாலி நடித்திருக்கின்றனர்.

பகீரா: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பகீரா. இந்தப் படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா நடித்திருக்கிறார். சீரியல் கில்லர் கதையை மைய்யமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. 2022 ல் ரிலீசாக வேண்டிய இந்த படம் ஒரு சில காரணங்களால் தற்போது ரிலீசாகிறது.

Also Read: விஜய் சேதுபதியை பின்பற்றும் சசிகுமார்.. இனிமேல் தான் இருக்கு என்னோட ஆட்டம்

பல்லு படாம பாத்துக்கோ: இயக்குனர் விஜய் வரதராஜா இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா செட்டி ஜெகன் ஆகியோர் நடித்த திரைப்படம் பல்லு படாம பாத்துக்கோ. சுவாம்பி கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அடல்ட் மூவி இது. முதல் முறையாக அட்டகத்தி தினேஷ் இதுபோன்ற இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள திரைப்படத்தில் நடிக்கிறார்.

இன் கார்: இன் கார் திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை ஹர்ஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். ரித்திகா சிங் மற்றும் சந்திப் கோயட் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஒரு தேசிய நெடுஞ்சாலையில் காருக்குள் நடக்கும் த்ரில்லர் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read: சூழ்நிலை கைதியான சசிகுமார்.. உச்சகட்ட விரக்தியில் படும்பாடு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்