தாத்தா சாயலில் இருக்கும் தனுஷ் மகன் யாத்ரா.. அப்பா, அம்மாவை மிஞ்சிய உயரம், வைரலாகும் ஃபோட்டோ

Dhanush-Yatra: இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட தனுசுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகனான யாத்ரா இப்போது அம்மா, அப்பாவையே மிஞ்சும் அளவுக்கு நெடுநெடு என வளர்ந்து நிற்கும் புகைப்படம் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தனுஷ் அடிக்கடி தன்னுடைய பட நிகழ்ச்சிகளுக்கு தன் இரு மகன்களையும் அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது யாத்ராவை பார்த்த பலரும் தாத்தா ரஜினியின் சாயலில் இருக்கிறாரே என்று சிலாகித்து பேசி வந்தனர். தற்போது வெளியாகி உள்ள ஒரு போட்டோவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

Also read: அடுத்த மூணு வருஷத்துக்கு வரிசை கட்டி நிற்கும் தனுஷின் 5 படங்கள்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா வட சென்னை 2?

அதாவது ஐஸ்வர்யா ஒரு குடும்ப விழாவின்போது எடுக்கப்பட்ட போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன் மூத்த மகனுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள அவர் தன் மகனை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த போட்டோவில் ஐஸ்வர்யா யாத்ராவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய கண்ணில் தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்ததை நினைத்து ஒரு பெருமிதமும் தெரிகிறது. அந்த போட்டோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also read: ஜெயிலரை போல 4 மேடையை அலறவிட்ட தளபதி பற்றிய பேச்சு.. வாய் கூசாமல் வாய்ப்புக்கு பிட்டை போட்ட அட்லி

அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அடுத்து ஹீரோ ரெடியாகிவிட்டார் என்றும் சூப்பர் ஸ்டாரின் வாரிசு இவர்தான் என்றும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி ரணகளமாகி கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் யாத்ராவையும் அதில் இழுத்து விட்டுள்ளனர்.

அந்த வகையில் தாத்தா, அப்பா இருவரும் கலந்த கலவையாக இருக்கும் யாத்ரா ஒரு ஹீரோ மெட்டீரியல் ஆக தான் இருக்கிறார். ஆக மொத்தம் அப்பா வழியில் இவரும் இளம் வயதிலேயே வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நெடுநெடு என வளர்ந்து நிற்கும் யாத்ரா

aishwarya-yatra
aishwarya-yatra
- Advertisement -