டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி, ஒரு நாள் போட்டிகளில் விளையாடாத 5 இந்திய வீரர்கள்

பொதுவாக பொறுமையாகவும், மட்டை போட்டு விளையாடும் வீரர்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டுமே தேர்வு செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக விளையாடி, ஒருநாள் போட்டியை கோட்டைவிட்ட வீரர்களின் விபரம்.

ஐந்து – ஷாபஸ் நதீம்: 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தென் ஆப்பிரிக்கா தொடரில் தேர்வானவர் தான் இந்த நதீம். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் முதல்தர ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வான போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆனால் அதன் பின் தொடர்ந்து சொதப்பிய காரணத்தினால், இவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இவர் இந்தியாவிற்காக ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடியதில்லை.

Nadeem-Cinemapettai.jpg
Nadeem-Cinemapettai.jpg

நான்கு – ஹனுமா விஹாரி: இவர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் இந்தியாவிற்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இவர் இன்றுவரை ஒரு ஒருநாள் போட்டியில் கூட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை.

Hanuma-Cinemapettai.jpg
Hanuma-Cinemapettai.jpg

முன்று – அபிநவ் முகுந்த்: ராஞ்சி போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி சாதனை படைத்தவர் அபினவ் முகுந்த். இவர் ஒரு இடது கை மட்டையாளர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியவர். இவர் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி, ஒருநாள் போட்டிகளை தவற விட்டவர்.

Abinav-Mukund-Cinemapettai.jpg
Abinav-Mukund-Cinemapettai.jpg

இரண்டு – இக்பால் சித்திக்: இவர் ஒரு ஆல்ரவுண்டர். இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியவர். இவர் இங்கிலாந்துக்கு எதிரான மொகாலியில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய அணிக்காக களம் இறங்கியவர். அதன்பின் இதுவரை டெஸ்ட் போட்டியிலும் சரி, ஒருநாள் போட்டியிலும் சரி இவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

IqbalSiddique-Cinemapettai.jpg
IqbalSiddique-Cinemapettai.jpg

ஒன்று – டேவிட் ஜான்சன்: 1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜான்சன் அறிமுகமானார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் அதன் பின் இவர் டெஸ்ட் தொடரில் மட்டுமில்லை, ஒரு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

David-Cinemapettai.jpg
David-Cinemapettai.jpg