சந்தானம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 5 நடிகர்கள்.. லொள்ளு சபாவில் இருந்து தொடரும் நட்பு

கோலிவுட்டில் நகைச்சுவையில் ஜாம்பவானாக இருந்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு இவர்களது வரிசையில் சந்தானமும் இடம் பிடித்தார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சில காலகட்டத்தில் காமெடியில் கிங்காக இருந்துள்ளனர். இந்நிலையில் வடிவேலு மாதிரி சந்தானம் குரூப்பிலும் அவருடைய நகைச்சுவைக்கு உயிரூட்டும் வகையில் 5 நபர்கள் இருந்திருக்கிறார்கள். அதிலும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சந்தானத்துடன் அவருடைய நண்பர்கள் சினிமாவிலும் இணைந்து பயணித்திருக்கிறார்.

புஜ்ஜி பாபு: 54 வருடங்களாக மேக்கப் மேனாக இருந்த இவர் சினிமாவின் முன்னணி பிரபலங்களான கமலஹாசன், அமிதாப் பச்சன், ரஜினி உள்ளிட்டோருக்கெல்லாம் இவர் மேக்கப் செய்திருக்கிறார். இவர் சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக தோன்றியும் கலக்கியிருந்தார்.

அதிலும் தலைவா படத்தில் சமையலே தெரியாத சமையல்காரர் ஆக வந்து சந்தானத்துடன் அடித்த லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலும் இவருடைய ஃபேமஸ் டயலாக் ஆன ‘டாக்டர் கிட்டயும் வக்கீல்டையும் பொய் சொல்லக்கூடாது. ஆனால் டாக்டரும் வக்கிலும் பொய் சொல்லலாம்’ என்பது படும் பேமஸ் ஆனது.

Also Read: வடிவேலு, சந்தானம் எடுத்த பிரேக்.. அதிர்ஷ்ட மழையில் நனையும் ஒரே காமெடி நடிகர்

லொள்ளு சபா சுவாமிநாதன்: விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சி ஆன லொள்ளு சபாவில் முக்கிய வேடத்தில் தோன்றிய இவர், அந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முக்கிய காமெடி நடிகராக வலம் வந்த சந்தானத்துடன் நிறைய படங்களில் தோன்றியிருக்கிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான சிவப்பு மனிதன் என்ற படத்தில் மாணவனாக நடித்திருந்தாலும், அதன் பிறகு நிறைய படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் இவர் சந்தனம் குரூப்பில் இணைந்து பல படங்களில் காமெடியில் கலகினார். அதிலும் சந்தானம் கதாநாயகனாக நடித்த சக்க போடு போடு ராஜா என்ற படத்தில் சாந்தாவின் மாமாவாக தோன்றி கலக்கி இருப்பார் .

லொள்ளு சபா மாறன்: காமெடி பஜார், லொள்ளு சபா ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணியாற்றியதின் மூலம் சினிமாவிற்கு காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்த இவர், ஸ்டெண்ட் நம்பர் ஒன் என்ற படத்தில் துணை நடிகராக நடித்திருப்பார். இவரும் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தில் திரைப்பட குழுவினராக இணைந்து லூட்டி அடித்து இருப்பார்.

அதன் பிறகு சந்தானம் கதாநாயகனாக நடித்த படங்கள் ஆன தில்லுக்கு துட்டு 2 படத்தில் மைக் மாறன் கதாபாத்திரத்திலும், பிஸ்கோத் படத்தில் அவசர ஊர்தி ஓட்டுனராகவும், பாரிஸ் ஜெயராஜ் படத்தில் வெங்கட்டின் மாமாவாகவும், டிக்கிலோனா படத்தில் குமார் என்ற கதாபாத்திரத்திலும், சபாபதி படத்தில் திருடனாகவும் நடித்திருப்பார். இப்படி சந்தானம் நடிக்கும் அனைத்து படங்களிலும் இவரையும் இணைத்துக் கொண்டார்.

Also Read: மீபத்தில் சந்தானம் ரசிகர்களை நோகடித்த 5 படங்கள்.. தியேட்டரில் தலைதெறிக்க ஓட வைத்த குலுகுலு

மொட்ட மனோகர்: பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகரான இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரியவர். இவருடைய வித்தியாசமான பேச்சினாலே ரசிகர்களின் நகைச்சுவை உணர்வை தூண்டினார். மேலும் இவருக்கும் சந்தனத்திற்கும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக சந்தனம் கதாநாயகனாக நடித்த A1, பிஸ்கோத் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார்.

விடிவி கணேஷ்: தயாரிப்பாளரும் நடிகருமான விடிவி கணேஷ், இவருடைய தயாரிப்பிலேயே வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அதன்பின் சந்தானம் காமெடி நடிகராக நடிக்கும் ஒரு சில படங்களிலும் இவரும் இணைந்து நடித்துக் கலக்கினார்.

Also Read: வடிவேலு, சந்தானம், விவேக் ஆகியோரை விட நான் தான் பெரிய நடிகன்.. பரபரப்பைக் கிளப்பிய காமெடி நடிகர்

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் தனித்து புகழ்பெற்றதை விட சந்தானத்தின் குரூப்பில் முக்கிய நபர்களாக இருந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றனர். அதிலும் சிலர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து தங்கள் நட்பை நிலைநாட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -