Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடிவேலு, சந்தானம், விவேக் ஆகியோரை விட நான் தான் பெரிய நடிகன்.. பரபரப்பைக் கிளப்பிய காமெடி நடிகர்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களை தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் முத்திரை பதித்தவர்கள் நிறைய உண்டு.
அந்த வகையில் வடிவேலு, விவேக் போன்றோரை குறிப்பிடச் சொல்லலாம். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ஒரு காலத்தில் நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் என சிறந்த காமெடி நடிகர்களை கொண்ட தமிழ் சினிமா தற்போது யோகிபாபு, சதீஸ் போன்றோரை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் யோகி பாபு கூட அவ்வப்போது சிறந்த காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கிறார். குறிப்பாக சமீபத்தில் வந்த கோமாளி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
ஆனால் சதீஷ் போன்ற நடிகர்கள் தங்களை எப்படித்தான் காமெடி நடிகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இது ஒருபுறமிருக்க அவர்களை நம்பித்தான் பல இளம் இயக்குனர்கள் வாய்ப்பு தருகின்றனர்.
ஆனால் உண்மையில் வடிவேலு, சந்தானம், விவேக் ஆகியோரை விட சிறப்பான நடிகர் என்றால் அது நான்தான் என நடிகர் கருணாஸ் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்த சூரரைப்போற்று படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
காமெடி கதாபாத்திரம் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் கருணாஸ் முத்திரை பதித்துள்ளதே அவர் கூறியதற்கு காரணம். உண்மையில் கருணாஸ் வடிவேலு, சந்தானம், விவேக் ஆகியோரை விட சிறந்த நடிகரா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

karunas-cinemapettai
