கமலுக்காக பார்க்க வேண்டிய 5 படங்கள்.. உலக நாயகனின் இந்த படங்களை கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க

உலகநாயகன் கமலஹாசனை சினிமா உலகின் கடவுள் என்றே சொல்லலாம். இவர் முயற்சிக்காத கதைகளும் இல்லை, நடிக்காத கதாபாத்திரங்களும் இல்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்து நடிப்புக்கு அகராதியாக இருக்கிறார் கமல். சினிமாவில் 60 ஆண்டுகளை கடந்த கமலின் இந்த ஐந்து படங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.

வறுமையின் நிறம் சிவப்பு: உலக நாயகன் கமலஹாசனின் குருவான கே பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் தான் வறுமையின் நிறம் சிவப்பு. வேலை கிடைக்காத ஒரு இளைஞன், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்கான கட்டுகோப்புகளில் இருந்து வெளிவர முடியாமல் அன்றைய நவீன உலகத்தில் வாழ போராடும் கதை இது. இந்தப் படத்தில் பாரதியாரின் வெள்ளை நிறத்தொரு பூனை கவிதையை சொல்லும் காட்சி இன்று வரை பிரமிக்க வைக்கும் ஒன்று. பசியின் காரணத்தால் சேற்றில் விழுந்த பழத்தை எடுத்து கழுவி சாப்பிட நினைத்து ஒரு நிமிடம் யோசித்து அதை கமல் கீழே போடுவார். இந்தக் காட்சியில் ஒரு நொடியில் அத்தனை உணர்வுகளையும் கண்முன் காட்டி இருப்பார்.

Also Read:திரும்பத் திரும்ப நான் ஒரு பெரிய மனுஷன் என நிரூபிக்கும் கமல்.. விருது விழாவில் வாயடைக்க வைத்த சம்பவம்

நாயகன்: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தின் கமல்ஹாசனின் வேறொரு பரிமாணத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்த திரைப்படம் நாயகன். ஒவ்வொரு காட்சியிலும் கமல், வேலு நாயக்கர் ஆகவே வாழ்ந்திருப்பார். போலீசில் அடி வாங்கும் காட்சி, தன் மகன் இறந்த பின்பு அழும் காட்சி, மகளை அடித்து விட்டு பின் அதை நினைத்து கண்ணீர் விடும் காட்சி என அத்தனையிலும் கலங்கடித்து இருப்பார் கமல்.

மகாநதி: ஒரு தந்தையாக கமல் பல்வேறு பரிமாணத்தை காட்டிய படம் மகாநதி. பிள்ளைகளுக்காக நகர வாழ்க்கையை தேடி வரும் கமல், பின்பு அதுவே நரகம் ஆகிவிட அதிலிருந்து பிள்ளைகளை காப்பாற்ற போராடுவார். ஒரு கட்டத்தில் இரண்டு பிள்ளைகளையும் தொலைத்து நிற்கும் கமல் தன் மகளை மும்பையில் ரெட் லைட் பகுதியில் கண்டுபிடிக்கும் பொழுது அந்தக் காட்சியைப் பார்க்கும் அத்தனை பேரையும் அழ வைத்திருப்பார்.

Also Read:கமலை பார்த்து சுதாரித்துக் கொண்ட ரஜினி.. கெத்தை விடாமல் பிடித்து தொங்கும் சூப்பர் ஸ்டார்

அன்பே சிவம்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கமலஹாசன் நடித்த படம் அன்பே சிவம். இந்தப் படம் வணிக ரீதியாக அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முகம் சிதைந்து, கால் நடக்க முடியாமல் நடக்கும் சிவமாக வரும் கமலை இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது.

விருமாண்டி: ரஷோமோன் விளைவு என்னும் அறிவியல் விளைவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. அதாவது ஒரே கதையை இருவரது பார்வையில் பார்ப்பது தான் இந்த விளைவின் அர்த்தம். சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் விருமாண்டி மற்றும் கொத்தால தேவர் தங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரே கதையை அவரவர் பார்வையில் சொல்வார்கள். இந்தப் படம் வந்த புதிதில் யாருக்கும் புரியாமல் இருந்தாலும் இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் தேடிப் பார்க்கும் ஒரு கதையாக இருக்கிறது.

Also Read:சிவகார்த்திகேயன், தனுஷை பதம் பார்க்க தீபாவளிக்கு களமிறங்கும் விரல் நடிகர்.. பக்கபலமாக நிற்கும் கமல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்