டிவியில் பார்த்தும், சலிப்பு தட்டாத 5 படங்கள்.. கண்டிப்பான வளர்ப்பில் அசத்திய எம்டன்

Actor Nasar: திரையரங்கில் கிடைத்த வெற்றிக்கு பிறகு, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. அவ்வாறு திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய வகையில் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியாத படங்கள் இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் விதமாய் அமைந்த படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். அவ்வாறு டிவியில் பார்த்தும், சற்றும் சலிப்பு தட்டாத 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: திருமணம் ஆகியும் திருந்தாமல் இருந்த மருமகள்.. கடுப்பாகி திட்டிவிட்ட தனுஷின் அப்பா

நாட்டாமை: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் நாட்டாமை. இப்படத்தில் சரத்குமார், மீனா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். விஜயகுமார் குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுக்கும் கதாபாத்திரத்தில் பொன்னம்பலம் சிறப்புற நடித்திருப்பார். அன்றைய காலகட்டத்தில் இவ்வகை படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதைத்தொடர்ந்து தற்பொழுது டிவியில் போட்டாலும், உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இப்படத்தின் கதை தாக்கம் அமைந்திருக்கும்.

சூர்யவம்சம்: பல வருடங்கள் கடந்தாலும், மக்களின் பேராதரவை பெற்ற படங்களில் சூர்யவம்சமும் ஒன்று. குடும்ப சூழலில் ஏற்படும் பிரச்சனையை எதிர்கொள்ளும், அறிவுரை கூறும் படமாக இப்படம் இன்று வரை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரே பாட்டில், அடுத்தடுத்த முயற்சியில் வெற்றி காணும் சரத்குமார் இடம்பெறும் காட்சிகள் மக்களை கவர்ந்த ஒன்றாகும்.

Also Read: சரக்கு தீர்ந்த நிலையில் நிராயுதபாணியாக நிற்கும் இயக்குனர்.. ஆள விடு என எஸ்கேப் ஆன தனுஷ்

பாட்ஷா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து இன்று வரை சிறந்த கேங்ஸ்டர் படமாக பேசப்படும் படங்களில் ஒன்றுதான் பாட்ஷா. இப்படத்தில் ரகுவரன், நக்மா, ரஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தின் கதைக்கு ஏற்ப இவர்கள் ஏற்ற கேரக்டரில் சிறப்புற நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் வில்லனான ரகுவரனின் நடிப்பு இக்காலகட்ட படத்திற்கு போட்டி போடும் விதமாக அமைந்திருக்கும்.

எம் மகன்: வில்லன் கதாபாத்திரம் ஏற்கும் நாசரின் மாறுபட்ட கேரக்டரில் அமைந்த படம் தான் எம் மகன். திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக பெற்ற மகனின் விருப்பத்தை அறியாது கண்டிப்பாகவும், கடுமையாகவும் நடந்து கொள்ளும் தந்தை கதாபாத்திரத்தில் நாசர் சிறப்புற நடித்திருப்பார். மேலும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் இப்படத்திற்கு இன்று வரை மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.

Also Read: தங்கலானை மிஞ்ச துடிக்கும் துருவ் விக்ரம்.. உண்மையான வீரரின் வாழ்க்கையை படமாக்கும் மாரி செல்வராஜ், வைரல் போஸ்டர்

முத்து: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து வெற்றி கொண்ட படம் தான் முத்து. நாடகக் கலையை மேம்படுத்தி அமைந்த காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. நல்ல கருத்துள்ள கதை அமைப்பு கொண்ட இப்படம் இன்று வரை குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காலம் கடந்தாலும் இப்படங்களின் கதை, காட்சிகள், வசனங்கள், நடிப்பு போன்றவை நம்மிடையே சிறிதளவும் சலிப்பை உண்டு படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்