வளரும் நடிகர்களுக்கு சப்போர்ட்டாக நடித்த விஜயகாந்தின் 5 படங்கள்.. சூர்யா கேரியருக்கு பக்கபலமாக இருந்த அண்ணா

Actor Vijaykanth: விஜயகாந்த் முன்னணி நடிகராக இருந்த பொழுது, அந்த நேரத்தில் இளம் நடிகர்களை சப்போர்ட் செய்யும் விதமாக அவர்கள் நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். தற்போது அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

செந்தூரப்பாண்டி: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு செந்தூரப்பாண்டி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், யுவராணி, விஜயகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் அண்ணனாக விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். விஜய்யின் காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து தம்பியின் காதலியுடன் சேர்த்து வைக்கும் பொறுப்பில் அண்ணனாக விஜயகாந்த் நடிப்பே பிரமாதமாக நடித்துக் கொடுத்திருப்பார்.

Also read: வடிவேலு மனுஷனே கிடையாது,10 வருஷம் பட்டும் திருந்தல.. கூனி குறுக வைத்த விஜயகாந்த்

பெரியண்ணா: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு பெரியண்ணா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், சூர்யா, மீனா, மானசா மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா தன் குடும்பத்தை கொன்ற வில்லன்களை கொலை செய்து சிறை கைதியாக கதை ஆரம்பிக்கப்படும். சில காரணங்களுக்காக வெளியே வந்த சூர்யா காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அதன் பின் இவருடைய காதலுக்கு ஏற்படும் தடைகளை தாண்டி விஜயகாந்த் எப்படி திருமணம் செய்து வைக்கிறார் என்பதை இப்படத்தின் மீதமுள்ள கதையாகும்.

ஊமை விழிகள்: இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு ஊமை விழிகள் திரைப்படம் வெளிவந்தது. இதில் டிஎஸ்பி தீன தயாளனாக விஜயகாந்த், விஜய்யாக அருண்பாண்டியன், சந்திரசேகர் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் கார்த்திக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் திரில்லர் திரைப்படமாக வந்திருக்கும். இதில் மர்ம கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் ஆபீஸராக விஜயகாந்த் நடித்திருப்பார். இத்திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெற்றி கண்டது.

Also read: டான்ஸ், நடிப்பு எதுவுமே தெரியாமல் சூர்யா தோற்ற 5 படங்கள்.. வெறுத்து போன ரஜினி, விஜயகாந்த் தூக்கி விட்ட படம்

செந்தூரப்பூவே: பி.ஆர்.தேவராஜ் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு செந்தூரப்பூவே திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ராம்கி மற்றும் நிரோஷாவின் காதலுக்கு தன் உயிரைக் கொடுத்தாவது ஒன்று சேர வைக்க வேண்டும் என்று படாத பாடுபடும் விஜயகாந்தின் நடிப்பை தரமாக காட்டப்பட்டிருக்கும்.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்து வெற்றி பெற்றது.

என் ஆசை மச்சான்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு என் ஆசை மச்சான் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், முரளி, ரேவதி, ரஞ்சிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் தம்பியாக முரளி நடித்திருப்பார். தம்பியின் காதலை சேர்த்து வைக்கும் பொறுப்பில் அண்ணனாக அவருடைய பொறுப்பை சரிவர செய்து அனைவரது கைத்தட்டலையும் விஜயகாந்த் பெற்றிருப்பார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகி மக்கள் மனதில் இன்னமும் நிலைத்து கொண்டிருக்கிறது.

Also read: விஜயகாந்த், ராதிகா இணைந்து கலக்கிய 6 படங்கள்.. கிட்டத்தட்ட 13 படங்களில் கைகோர்த்த ஜோடி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்