வடிவேலு மனுஷனே கிடையாது,10 வருஷம் பட்டும் திருந்தல.. கூனி குறுக வைத்த விஜயகாந்த்

Actor Vadivelu: வடிவேலுவுக்கும், விஜயகாந்துக்கும் இருக்கும் பிரச்சனை ஊர் உலகம் அறிந்தது தான். அதிலும் வடிவேலு தன்னை தூக்கி விட்ட கேப்டனை படுமோசமாக விமர்சித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் பத்து வருஷம் மட்டும் திருந்தாத நிலைமையில் தான் வைகை புயல் இப்போதும் இருக்கிறாராம்.

அதாவது கேப்டன் அரசியலில் பிசியாக இருந்த சமயத்தில் வடிவேலு அவர் மீது இருக்கும் கோபத்தின் காரணமாக திமுக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது விஜயகாந்தை கிண்டல் அடிக்கும் நோக்கத்துடன், எந்நேரமும் தண்ணீரிலேயே மிதக்கிறார் என்று படுமோசமாக விமர்சித்து இருந்தார்.

Also read: தலையாட்டி பொம்மையாய் மாறிய விஜயகாந்த்.. பாலகிருஷ்ணா போல் தமாஷ் ஹீரோவாக மாறிய கேப்டன்

இது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் சர்ச்சையாக மாறியது. இதனால் வடிவேலு 10 வருட காலம் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட சம்பவமும் நடந்தது. அது குறித்து தற்போது மீசை ராஜேந்திரன் பேசி இருக்கிறார். அதாவது வடிவேலு இந்த அளவுக்கு மோசமாக பேசியும் விஜயகாந்த் எந்த பதிலடியும் கொடுக்கவில்லை.

நாங்கள் எல்லாம் கோபப்பட்ட போது கூட அவர் எங்களை அமைதிப்படுத்தினார். அதனால் தான் அவர் பெரிய மனுஷனாக இருக்கிறார். ஆனால் வடிவேலு சிறந்த நடிகர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நல்ல மனுஷனே கிடையாது. பத்து வருஷம் கஷ்டப்பட்டும் அவர் இப்போது கூட திருந்தாமல் அதே ஆணவத்தோடு தான் இருக்கிறார்.

Also read: விஜயகாந்த் மிஸ் செய்த 2 படங்கள்.. லேடி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட முடியாத கேப்டன்

ஆனால் விஜயகாந்த், வடிவேலு வாய்ப்பு இல்லாமல் இருந்த போது கூட அவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறியுள்ளார். இது வடிவேலுவுக்கும் தெரியும். அந்த வகையில் பெரிய மனுஷனாக நடந்து கொண்ட விஜயகாந்த்தால் வடிவேலு தான் கூனிக்குறுகிப் போனார்.

மேலும் விஜயகாந்த் மாதிரி யாரும் இருக்க முடியாது என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பொதுவாகவே திரையுலகில் கேப்டன் எந்த அளவுக்கு தங்கமானவர் என்று பலருக்கும் தெரியும். அந்த வகையில் தன்னை தவறாக பேசிய வடிவேலு கூட நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஜயகாந்த் உண்மையில் சொக்கத்தங்கமாக இருக்கிறார்.

Also read: எங்கு போனாலும் கேப்டனின் பேச்சு தான்.. ஹிந்தி நடிகருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த்

Next Story

- Advertisement -