விஜயகாந்த், ராதிகா இணைந்து கலக்கிய 6 படங்கள்.. கிட்டத்தட்ட 13 படங்களில் கைகோர்த்த ஜோடி

சினிமாவை பொறுத்தவரை சில ஜோடிகள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதிகளவில் வரவேற்கப்பட்டு வரும். அந்த வகையில் 80களில் விஜயகாந்த் ராதிகா நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் கிட்டத்தட்ட இவர்கள் இருவரும் சேர்ந்து 13 படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அதில் இவர்கள் இணைந்து கலக்கிய ஆறு படங்களை மட்டும் பார்க்கலாம்.

நானே ராஜா நானே மந்திரி: பாலு ஆனந்த் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு நானே ராஜா நானே மந்திரி என்ற படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த் ரங்கமணி என்ற கேரக்டரில், ராதிகா பாக்கியலட்சுமி ஆகவும் இருவரும் எதிரும் புதிருமான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்கள். ஆனால் போகப் போக ராதிகாவிற்கு காதல் வந்ததும், விஜயகாந்த்திடம் உள்ள சில கேரக்டர்களை மாற்றி அவரை ஒரு புது மனிதராக மாற்றும் விதமாக இப் படம் அமைந்திருக்கும். இதில் மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என்ற பாடல் மிகவும் சூப்பர் ஹிட் ஆனது.

Also read: டான்ஸ், நடிப்பு எதுவுமே தெரியாமல் சூர்யா தோற்ற 5 படங்கள்.. வெறுத்து போன ரஜினி, விஜயகாந்த் தூக்கி விட்ட படம்

நீதியின் மறுபக்கம்: எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு நீதியின் மறுபக்கம் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராதிகா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரை மாற்றி அனைத்து தவறுகளையும் சுட்டிக்காட்டி விஜயகாந்துக்கு பக்கபலமாக ராதிகா இதில் ஜோடி போட்டு நடித்திருப்பார்.

சிறைப்பறவை: மனோபாலா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு சிறைப்பறவை திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராதிகா, செந்தில் மற்றும் லட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் போலீஸ் கேரக்டரிலும், தண்டனை அனுபவிக்கும் ராதிகாவின் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: விஜயகாந்த் மிஸ் செய்த 2 படங்கள்.. லேடி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட முடியாத கேப்டன்

வீரபாண்டியன்: கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வீரபாண்டியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், விஜயகாந்த், ராதிகா, சுமித்ரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் திருட்டு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் ஒரு வீரமுள்ள கதாபாத்திரத்தில் மணிமாறனாக நடித்திருப்பார். இதில் இவருக்கு ஜோடியாக ராதிகா மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ஜோடி சேர்ந்திருப்பார்.

உழவன் மகன்: ஆர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு உழவன் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராதிகா, ராதா, ராதா ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் விஜயகாந்த் சின்னத்துரை மற்றும் சிவா என்று இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் செய்யாத தவறுக்கு தண்டனை அனுப்பி வைக்கும் விஜயகாந்தை காப்பாற்றும் விதமாக கதை நகரும். இதில் இவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருப்பார்.

தெற்கத்திக் கள்ளன்: பி கலைமணி இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு தெற்கத்திக் கள்ளன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த் கள்ளனாகவும், ராதிகா ராதாவாக இருவரும் ஜோடி போட்டு நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜயகாந்த் கிராமத்து மண்வாசனை நிறைந்த கேரக்டரிலும், இவருக்கு எதிராக திமிர் பிடித்த கோபக்காரி கேரக்டரில் ராதிகாவும் நடித்திருப்பார். இவருடைய காதல் கல்யாணம் எந்த மாதிரியாக மாறுகிறது என்பதை மீதமுள்ள கதையாகும்.

Also read: தலையாட்டி பொம்மையாய் மாறிய விஜயகாந்த்.. பாலகிருஷ்ணா போல் தமாஷ் ஹீரோவாக மாறிய கேப்டன்

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -