நெகட்டிவ் ரோலில் சிவாஜி கலக்கிய 5 படங்கள்.. ஆல் ரவுண்டராக இருந்த நடிகர் திலகம்

அந்த கால தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிப்பு அரக்கனாக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி விடுவார். இதனாலேயே அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் அடிமையாக இருந்தார்கள். அந்த வகையில் இவர் எத்தனையோ கேரக்டர்கள் நடித்திருந்தாலும் நெகட்டிவ் ரோலில் கலக்கிய சில திரைப்படங்களும் இருக்கிறது. அதைப்பற்றி இங்கு விரிவாக காண்போம்.

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து பண்டரிபாய் நடித்திருப்பார். திகில் கலந்த திரைப்படமாக வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி கொலை குற்றவாளியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் வித்தியாசமாக இருந்த அவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

Also read: சிவாஜி வில்லனாக நடித்த ஒரே படம்.. மக்களுக்கு தன் மீது வெறுப்பை உண்டாக்கிய நடிகர் திலகம்

புதிய பறவை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி, சரோஜாதேவி, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் சிவாஜி தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க பார்க்கும் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். அவருடைய வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

திரும்பிப் பார் டி ஆர் சுந்தரம் இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையில் இப்படம் வெளிவந்தது. 1953 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சிவாஜி, பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் சிவாஜி பெண் மோகம் கொண்ட கேரக்டரில் நடித்திருப்பார். அவர் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also read: அப்பா, மகனாக நடித்து அதிரிபுதிரி ஹிட்டான 5 படங்கள்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக பின்னிய சிவாஜி

உத்தமபுத்திரன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து பத்மினி நடித்திருப்பார். இதில் சிவாஜி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் கதாபாத்திரமாக அமைக்கப்பட்டு இருக்கும்.

கருடா சௌக்கியமா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி, சுஜாதா, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதில் சிவாஜி தீனதயாளன் என்ற நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். ஆனாலும் அவருடைய கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

Also read: 250 படங்களில் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர்.. ப்பா தமிழ் சினிமாவில் இதுவரை உடைக்கப்படாத சாதனை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்