சேர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாத 5 டபுள் ஹீரோக்கள்.. கட்டப்பாவிற்கு ரஜினி மீது என்ன கோபம் என்றே தெரியல

என்னதான் உயிர் நண்பனாக இருந்தாலும், நட்பு என்பது வேறு, தொழில் என்பது வேறு இக்கூற்று சினிமா பிரபலங்களுக்கும் பொருந்தும். அவ்வாறு ஒரு காலகட்டத்திற்கு பிறகு வெற்றி காணும் இருவரிடமும் ஈகோ கிளாஸ் என்பது இருக்கத்தான் செய்கிறது.

அவ்வாறு நண்பர்களாய் பழகியும், ஈகோவால் தொழில் சம்பந்தமான பிரிவினை சந்தித்த பிரபலங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். இதுபோன்ற காரணத்தால் ஒன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தவிர்த்து விடுகின்றனர். அவ்வாறு இதுவரை சேர்ந்து நடிக்காத 5 டபுள் ஹீரோக்களை பற்றி காணலாம்.

Also Read: வெற்றிமாறனின் சக்சஸ் படத்தை எடுக்க ஆசைப்பட்ட மணிரத்னம்.. விஷயம் தெரிந்து முந்தி கொண்ட சாமத்தியம்

தனுஷ்- சிம்பு: இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதையும் தவிர்த்து, சக நடிகர்களாய் இருந்தாலும் அவரவர் வெற்றியில் முக்கியத்துவம் காட்டி வந்தனர். இந்நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிம்பு காதலித்த பெண்ணை தனுஷ் மணக்க, இதுபோன்ற மன கசப்புகளால் இதுவரை ஒன்று சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-சத்யராஜ்: 80ஸ்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக மிஸ்டர் பாரத் படத்தில் இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக நடித்திருப்பார்கள். அதைத்தொடர்ந்து சிவாஜி படத்தில் சங்கர் சத்யராஜிடம் வில்லனாக நடிக்க சொன்னபோது அதை மறுத்திருக்கிறார். பல படங்களில் அவருக்கு வில்லனாக நான் நடித்து விட்டேன் என் படங்களில் ரஜினியை வில்லனாக நடிக்க சொல்லுங்கள் எனவும் முரண்பட பேசியதன் காரணமாக அதன்பின் அவர்கள் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: என் பொண்டாட்டிய விட நீங்க தான் அழகு, மேடையில் ஜொள்ளுவிட்ட போனி.. இது என்ன டா மயிலுக்கு வந்த சோதனை!

அஜித்-வடிவேலு: மைனர் மாப்பிள்ளை, ஆசை, ராசி,தொடரும் போன்ற படங்களில் இருவரும் ஒன்று சேர்ந்து நடித்திருப்பார்கள். ஆசைப் பட வெற்றிக்கு பிறகு முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அஜித் அதன்பின் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கையில், வடிவேலு அஜித்திடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் அதன்பின் இவருடன் நடிக்க மறுத்து விட்டாராம் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-நெப்போலியன்: 2007ல் வெளிவந்த போக்கிரி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நெப்போலியன். அதன்பின் படப்பிடிப்பில் விஜய்யை காண முயன்ற போது ஏற்பட்ட பிரச்சனையால், விஜய்யுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லாமல் போய்விட்டதாக கூறினார் நெப்போலியன். மேலும் தான் அவரிடம் பேச தயாராக தான் இருப்பதாக கூறினார். ஆனால் விஜய் தான் என்னிடம் பேச மறுப்பதாக கூறி கவலை பட்டார் நெப்போலியன்.

Also Read: மீண்டும் 3 வருடம் கழித்து அவர் இயக்கத்தில் நடிக்க ஆசை.. மேடையில் ஓப்பனாக பேசிய உதயநிதி

சந்தானம்- சிவகார்த்திகேயன்: இருவரும் விஜய் டிவி மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர்கள். இதில் நகைச்சுவை நடிகராக வருவார் என நினைத்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக கதாபாத்திரம் மேற்கொண்டதால் அதை கண்டு படங்களில் ஹீரோவாக இடம் பெற்றார் சந்தானம். ஆனால் நிஜத்தில் அவருக்கு ஹீரோவாய் நடித்த எந்த படமும் கை கொடுக்காமல் போனது. இது போன்ற ஈகோ கிளாஸ் ஆல் இதுவரை இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News