புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. டைட்டிலை அடிக்க போகும் அதிர்ஷ்டசாலி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 97 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று மந்தமாகத்தான் சென்றது.

ஆனாலும் இதில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளரும் உள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட போட்டியாளர்களில் ஐந்தாவது இடத்தை அமுதவாணன் பெற்றுள்ளார். காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் பைனல் லிஸ்ட்டாக முதலில் தேர்வாகி உள்ளார்.

Also Read : 97 நாட்களில் ஏடிகே வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

அமுதவாணனை தொடர்ந்த நான்காவது இடத்தில் மைனா நந்தினி உள்ளார். வெள்ளிதிரையில் சில படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. எதையும் நகைச்சுவையாக பேசக்கூடிய இவருக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது.

மேலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் போட்டியாளர்களில் மூன்றாவது இடத்தை ஷிவின் பெற்றுள்ளார். எந்த விஷயமாக இருந்தாலும் முன்னோக்கு பார்வையுடன் பார்க்கக்கூடியவர் ஷிவின். அதுமட்டுமின்றி டாஸ்கிலும் சிறப்பாக விளையாடி உள்ளார்.

Also Read : வாரிசு படத்தில் ஒரு டயலாக் கூட இல்லாமல் அசிங்கப்பட்ட பிக் பாஸ் நடிகை.. குஷ்புக்கு இவங்க எவ்வளவோ பரவாயில்ல

ஷிவினை தொடர்ந்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் அசீம். ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சற்று கோபமாக கையாளக்கூடியவர் அசீம். ஆனாலும் தொடர்ந்து மக்கள் இவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இதனால் தான் மக்கள் விரும்பும் போட்டியாளர்களில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் இடத்தை விக்ரமன் பெற்றுள்ளார். இவருடைய அனைத்து கருத்துக்களுமே ரசிகர்கள் உற்று நோக்குகிறார்கள். விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் பட்டதை வெல்வார் என பலரும் கருதுகிறார்கள். மேலும் டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் விக்ரமன் இடம் பிடித்து விட்டார்.

Also Read : பிக் பாஸ் வீட்டில் புகுந்த 2 விஷப்பூச்சிகள்.. கலர் கோழி குஞ்சாக மாறிய அமுதவானன் வைரல் வீடியோ

- Advertisement -

Trending News