Videos | வீடியோக்கள்
பிக் பாஸ் வீட்டில் புகுந்த 2 விஷப்பூச்சிகள்.. கலர் கோழி குஞ்சாக மாறிய அமுதவானன் வைரல் வீடியோ
இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டு விஷப்பூச்சிகள் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் வீட்டை ரணகளம் ஆக்குகின்றனர்.
21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவடை உள்ளதால் ரசிகர்களின் மத்தியில் யார் டைட்டில் வின்னர் என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் 7 போட்டியாளர்களை மகிழ்விப்பதற்கும், அவர்களது மன அழுத்தத்தை குறைக்கவும், எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கின்றனர்.
அதிலும் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என நினைத்த இரண்டு விஷப்பூச்சிகளான தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து இருவரும் தற்போது பிக் பாஸ் வீட்டில் நுழைந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்களை மட்டுமல்ல பிக் பாஸ் போட்டியாளர்களும் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.
Also Read: பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.. அடித்து சொல்லும் நட்சத்திர ஜோடி
அத்துடன் தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து இருவரும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கின்றனர். அதிலும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதியான அமுதவாணன் தனலட்சுமியிடம் வசமாக சிக்கிக் கொண்டார். தனலட்சுமிகாக அமுதவாணன், தன்னுடைய முடியை ஹேர் கலரிங் செய்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
இதற்கு ஒத்துக்கொள்ளும் அமுதவாணன் தலையில் மஞ்சள் நிற வர்ணத்தை பூசி கலர் கோழி குஞ்சாகவே மாற்றி விட்டனர். மேலும் தனலட்சுமி எலிமினேட் ஆனது பலராலும் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் கதிரவன் எந்தவித பிரச்சனையையும் இழு போட்டுக் கொள்ளாமல், தானுண்டு தன் வேலை உண்டு என மிச்சர் தின்னு கொண்டிருக்கும் அவரெல்லாம், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
Also Read: பிக்பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறும் டம்மி போட்டியாளர்.. யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்
எனவே கதிரவன் இடத்தில் இப்போது தனலட்சுமி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கெஸ்ட் ஆக வீட்டிற்குள் வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் வருத்தமடைகின்றனர். அதுமட்டுமின்றி ஜிபி முத்துவும் தன்னுடைய மகனின் மீது அபரிவிதமான பாசத்தால் திடீரென்று வெளியேறியது பலரையும் திகைப்புக்குள்ளாக்கியது.
அவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் இப்போது இருக்கும் 7 பேரில் அவரும் ஒருவராக இருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து இருவரும் பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்யும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
Also Read: 91 நாட்கள் பெஸ்ட் ஹாலிடேக்கு வந்த ரட்சிதாவின் மொத்த சம்பளம்.. கைக்கெட்டியது வாய்க்கெட்டம போச்சே
கலர் கோழி குஞ்சாக மாறிய அமுதவானன் வைரல் வீடியோ
