கல்யாணத்துக்கு பின்னும் மார்க்கெட்டை இழக்காத 6 நடிகைகள்.. கேரியருக்காக காதல் கணவரையே தூக்கி எறிந்த நடிகை

Top 5 Tamil Actresses: திரையுலகில் இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய்விடும் என்று 40 வயதானாலும் கல்யாணம் செய்ய தயங்குகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொண்டும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 6 நடிகைகள் தங்களுடைய மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள். அதிலும் சினிமா கேரியருக்காக முன்னணி நடிகை ஒருவர் தன்னுடைய கணவரை தூக்கி எறிந்து விட்டார்.

மஞ்சு வாரியர்: 17 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய மஞ்சு வாரியார், தற்போது 45 வயதாகியும் முடிசூடா ராணி போல் மலையாள சினிமாவில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகி, நடனக் கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையான இவர், பிறந்தது தமிழ்நாட்டில் இருக்கும் நாகர்கோயிலில் தான்.

இவருக்கும் நடிகர் திலீப்புக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். என்னதான் திருமணம் ஆகி அதைத் தொடர்ந்து விவாகரத்து ஆனாலும் மஞ்சு வாரியர் தனது சினிமா கேரியரில் மட்டும் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் இவர் அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும், துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்து தமிழ் ரசிகர்களையும் வசியம் செய்தார்.

Also read: 5 மடங்கு லேடி சூப்பர் ஸ்டாரை விட மேல் என காட்டிய சமந்தா.. இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட திரிஷா

ஜோதிகா: 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை விரும்பி 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா, மறுபடியும் 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்பு வரிசையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகும் எந்தவித காம்ப்ரமைசும் பண்ணாமல் நடித்து வருகிறார்.

சமந்தா: சோசியல் மீடியாவில் சுமார் 30 மில்லியன் ஃபாலோவஸ் கொண்ட நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் எந்தவித மாற்றமும் இல்லாமல் சினிமாவில் வழக்கம் போல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இது அவருடைய புகுந்த வீட்டிற்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய சினிமா கேரியர் தான் முக்கியம் என காதல் கணவரை தூக்கி எறிந்து விட்டு, தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனாலே கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது சமந்தா விவாகரத்து பெற்று காதல் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

Also read: இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk

ரம்யா கிருஷ்ணன்: வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் ரவுண்டு கட்டிய ரம்யா கிருஷ்ணன் 2003ம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்காமல் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தற்போது வரை தேர்வு செய்து நடித்திருக்கிறார்.

நஸ்ரியா: நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மலையாள நடிகை நஸ்ரியா பின் ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் தனது க்யூட்னஸை காண்பித்து இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். பின்பு இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை 12 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நயன்தாரா: ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா இப்போது கோலிவுட்டில் மட்டுமல்ல ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். சிம்பு, பிரபு தேவா போன்றவரின் காதல் வலையில் சிக்கிய நயன்தாரா பின்பு தன்னுடைய சினிமா கேரியர் தான் முக்கியம் என்று அவர்களை கழட்டி விட்டு, பின்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து விடாமல் பக்கா பிளான் போட்டு டாப் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also read: இவரை விட்டா வேற யாரும் இல்லைன்னு பொருத்தமான 5 கதாபாத்திரங்கள்.. சிவசாமியாய் வாழ்ந்த தனுஷ்