வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இவரை விட்டா வேற யாரும் இல்லைன்னு பொருத்தமான 5 கதாபாத்திரங்கள்.. சிவசாமியாய் வாழ்ந்த தனுஷ்

சினிமாவில் ஒருவரிடம் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க சொன்னால், அதை மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடிப்பது பெரிய விஷயம். ஆனால் சிலர் அனைத்தையும் தாண்டி ஒரு கை பார்த்திடலாம் என்பது போல, நடிப்பில் சகலகலா வல்லவர்களாக வலம் வருகிறார்கள். அப்படி எந்த ரோல் கொடுத்தாலும், பர்ஃபக்ட்டாக நடிக்கும் ஐந்து ஹீரோக்கள் பற்றி பார்க்கலாம்.

சிவாஜி: 1952 ஆம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி. தனது தத்துரூபமான நடிப்பினால் நடிகர் திலகம் என புகழ்பெற்றவர். சரித்திர வீரர்களின் மனோகரா ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காக பெயர் பெற்றவை. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்று திறம்பட நடிக்கச் செய்தார். புராண கால கடவுளான திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் அனைத்து கடவுளின் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இவரே. தனது தனித்துவமான நடிப்பினால் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகப் பார்க்க என பல விருதுகள் குவித்தவர்.

Also Read:லியோ மேடை கிடைக்காததால் பாட்டு வரிகள் மூலம் பதிலடி கொடுத்த விஜய்.. காக்கா கழுகு சண்டை ஓயாது போல

கமல்ஹாசன்: சினிமா துறையில் ஒரு சில ஆண்டுகள் தன்னை தக்கவைத்துக் கொள்வதே அனைவருக்கும் இமாலய சாதனையாக இருக்கும். கமலின் 60 ஆண்டுகளாக பயணம் மிகப்பெரிய சாதனை. இந்தியாவில் அதிகப்படியான தேசிய விருதுகளை பெற்ற நடிகர். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, தற்போது வரை நிலைத்து இருக்கிறார். விஸ்வரூபம் படத்திற்காக தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். தேவர்மகன் திரைப்படத்துக்கு ஐந்து தேசிய விருதுகளை பெற்றுள்ளது. நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். நாயகன் படத்தை எல்லா காலத்திலும் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக பட்டியலிட்டது . இந்த படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. தசாவதாரம் படத்திற்கு பத்து வேடங்கள் போட்டு மிரள வைத்தவர்.

விக்ரம்: எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தமிழ் திரையுலகத்தில் 1990 வது வருடத்தில் கால் பதித்து, தற்போது லீடிங் நடிகராக இருப்பவர் விக்ரம். படிப்படியா தன்னோட திறமைகளை வளர்த்து தெலுங்கு, மலையாளம், போன்ற பல மொழி படங்களில் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கிறார். என் காதல் கண்மனியில் தொடங்கி, பொன்னியின் செல்வன் வரை வித்தியாச நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்தவர்.

Also Read:உதயநிதிக்கு லியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. விஜய்க்கு வந்த நெருக்கடிக்கு இதான் காரண

தனுஷ்: 2002ல் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகமானர் தனுஷ். காதல் கொண்டேனில் சைக்கோ போலவும், புதுக்கோட்டையில் இருந்து சரவணனில் ரௌடியாகவும் , யாரடி நீ மோகினி படத்தில் சாந்தமாக , வடசென்னை படத்தில் கே ங்கேஸ்டெர் என பல ரோலில் நடித்துள்ளார். திருடா திருடி,குட்டி, உத்தமபுத்திரன், அம்பிகாபதி, வேலை இல்லா பட்டதாரி, மாரி, கர்ணன், திருச்சிற்றம்பலம், வாத்தி இப்படி இவரின் தனித்துவமான நடிப்பில் வெளியான படங்களின் லிஸ்ட்டை அடுக்கி கொண்டே போகலாம்

பகத் பாசில்: நடிப்பால் தாய்மொழி மட்டுமின்றி பிற மாநில படங்களிலும் கலக்குவதையும் திரைத்துறையினரால் தி கிரேட் ஆக்டர் என வியப்போடு அழைக்கப்படடுபவர் பகத் பாசில். அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்த படம் மாமன்னன், இதில் வில்லனாக மிரள வைத்து இருப்பார். பயங்கரவில்லன் ஆகிய பிரகாஷ்ராஜையே மறக்கடிக்கும் அளவில் இருந்தது இவரின் நடிப்பு. கமலுடன் நடித்த விக்ரம் படம் பாராட்டும் வகையில் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி, ஹீரோ, வில்லன், துணை நடிகராக மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Also Read:உதயநிதியை மறைமுகமாக வறுத்தெடுத்த விஷால்.. எங்கேயோ செமத்தயா வாங்கி இருப்பார் போல

- Advertisement -

Trending News