வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

5 மடங்கு லேடி சூப்பர் ஸ்டாரை விட மேல் என காட்டிய சமந்தா.. இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட திரிஷா

Actress Samantha: நயன்தாராவை விட நான் ஐந்து மடங்கும் மேல் என்பதை காட்டும் விதமாக சமந்தா ஒரு சந்தோஷமான தகவலை ரசிகர்களிடம் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த விஷயத்தில் திரிஷா கிட்ட கூட நெருங்க முடியாமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமந்தா தற்போது திரையுலகிலிருந்து ஒரு பிரேக் எடுத்துள்ள நிலையில், வெளிநாட்டில் சந்தோஷமாக தன்னுடைய வெக்கேஷனை கழிக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்துடன் ஒரு சுவாரசியமான தகவலையும் பகிர்ந்து உள்ளார். தற்சமயம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார்.

Also Read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 27 படங்கள்.. 25 கோடி நஷ்டத்தில் செம அடி வாங்கிய டாப் ஹீரோ

இருப்பினும் இவரை பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்ற வருகிறது. அதிலும் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு ஹிந்தியில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் ‘தி ஃபேமிலி மென் 2’ என்ற வெப் சீரிஸ் மூலம் வட இந்திய ரசிகர்களை கவர்ந்த சமந்தா, தன்னுடைய வெக்கேஷனை முடித்த பின்பு மறுபடியும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க தயாராகுவார்.

Also Read: மீண்டும் இணையும் சமந்தா – நாக சைதன்யா.. ஒரே போட்டோவால் வதந்திகளுக்கு வைத்த முற்றுப்புள்ளி

இந்த நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டில் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 30.1 மில்லியன் ரசிகர்கள் தன்னைப் பின் தொடர்வதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த சாம் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கெத்து காட்டும் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெறும் 5.9 மில்லியன் ஃபாலோவர்சை மட்டுமே பெற்றுள்ளார். நயன்தாராவுடன் ஒப்பிடும்போது சமந்தா ஐந்து மடங்கு அதிகமான ரசிகர்களை கையில் வைத்திருக்கிறார். இதே போல ஸ்ருதிஹாசனுக்கு 24.1 ஃபாலோவர்ஸும், கீர்த்தி சுரேஷுக்கு 16.3 ஃபாலோவர்ஸும், த்ரிஷாவுக்கு வெறும் 6.2 ஃபாலோவர்ஸும் மட்டுமே இருக்கிறார்கள்.

Also Read: நீயும் வேண்டாம், 4000 கோடி சொத்தும் வேண்டாம்.. கெத்து காட்டிய சமந்தா, தடுக்கி விழுந்த நடிகர்

- Advertisement -

Trending News