நீங்கள் எல்லாம் கடைசி வரை சப்போர்ட்டிங் கேரக்டர் தான்.. முத்திரை குத்தப்பட்ட 5 நடிகர்கள்

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்திற்கு ஹீரோ ஹீரோயின் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் சப்போர்டிங் கேரக்டர்கள். சப்போர்டிங் கேரக்டர்கள் கொஞ்சம் சொதப்பினாலும் படம் மொத்தமும் சொதப்பி விடும். சில நேரங்களில் ஹீரோக்களை விட சப்போர்டிங் கதாநாயகர்கள் பார்வையாளர்களை கவர்ந்து விடுவார்கள். ஹீரோ ஆவதற்கு எல்லா தகுதியும் இருந்தும் சிலர் இன்னும் சப்போர்டிங் ஆக்டர்களாகவே நடித்து வருகிறார்கள்.

கலையரசன்: கலையரசன், இயக்குனர் மிஷ்கினின் நந்தலாலா, முகமூடி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் நடித்த அன்பு கேரக்டர் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். டார்லிங்2, ராஜா மந்திரி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இன்று வரை சப்போர்டிங் ரோல் வாய்ப்புகள் தான் அதிகம் கிடைக்கின்றன.

Also Read: சதியால் பறிபோன உயிர், பழி தீர்க்க வரும் ரத்த பந்தம்.. பேட்டைக்காளி 3 எபிசோட்களின் விமர்சனம்

வினய்: 2007 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னாலே உன்னாலே’ திரைப்படத்தின் மூலம் ஹீராவாகவே இவர் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். படம் ரிலீஸ் ஆன போது இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காத காரணத்தினால் ஹீரோ வாய்ப்பு சரிந்தது. பல வருடங்கள் கழித்து இவருக்கு இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பிரசன்னா: 2002 ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அதன் பின்னர் நிறைய படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. 2008 க்கு பிறகு இவர் சப்போர்டிங் கேரக்டர்கள் எடுத்து நடிக்க ஆரம்பித்தார். இப்போது இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான் செட் ஆகிறது.

Also Read: ரொமான்டிக் ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிய 10 நடிகர்கள்.. சாக்லேட் பாய் நடிகர்களை கொடூரமாக காட்டிய மிஸ்கின்

ஷ்யாம்: குஷி படத்தின் மூலம் துணை கதாபாத்திரமாக அறிமுகமானவர் ஷ்யாம். அதன் பின்னர் 12B படத்தின் மூலம் ஹீரோ ஆனார். இயற்கை, லேசா லேசா, உள்ளம் கேட்குமே போன்ற வெற்றி படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடித்த எந்த படங்களும் எடுபடவில்லை. இப்போது மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் சப்போர்டிங் கேரக்டராக நடித்து கொண்டிருக்கிறார்.

பாபி சிம்ஹா: காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஜிகர்தண்டா, நேரம், பேட்ட போன்ற படங்களில் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இடை இடையே ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும், இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிகமாக வாய்ப்பு கிடைக்கின்றன.

Also Read: நல்ல அழகு இருந்தும் ஜொலிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. காசு வேண்டாம் வாய்ப்பு தாங்க என கதறிய ஷ்யாம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்