கடைசி படம் சொதப்பியதால் காணாமல் போன 5 டாப் இயக்குனர்கள்.. அஜித்துடன் ரத்தமும் சதையுமாக ஒட்டி திரிந்த டைரக்டர்

5 directors who disappeared: திறமையான எத்தனையோ இயக்குனர்களுக்கு மத்தியில் சில இயக்குனர்கள் மட்டும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள். ஆரம்பத்தில் அந்த இயக்குனர்கள் நல்ல கதைகளையும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களையும் கொடுத்து வெற்றி இயக்குனர் என்ற பெயரை எடுத்திருக்கிறார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக அவர்கள் எடுத்த கடைசி படம் பெய்லியர் ஆகி இருக்கிறது.

இதனால் வேறு வழி இல்லாமல் இயக்குனர் பாதையை விட்டு சற்று ஒதுங்கி விட்டார்கள் என்றே சொல்லலாம். அப்படி காணாமல் போன சில இயக்குனர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

தரணி: சும்மா பெயரை கேட்டாலே அதிருதில்ல என்று சொல்வதற்கு ஏற்ப எதிரும் புதிரும் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தில், தூள், கில்லி போன்ற வெற்றி படங்களை கொடுத்து சாதனை படைத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் கடைசியாக சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ஃபெயிலரை சந்தித்து விட்டார். இதனால் துவண்டு போன இயக்குனர் தரணி மறுபடியும் சினிமாவை எட்டிக் கூட பார்க்க விரும்பாமல் போய்விட்டார்.

அமீர்: மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி ராம், பருத்திவீரன் என சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பின்பு ஜெயம் ரவியை வைத்து ஆதி பகவன் என்ற படத்தை கொடுத்து தோல்வியை தழுவி விட்டார். இதற்கு அடுத்து இன்னும் வரை எந்த படத்தையும் எடுக்க முடியாமல் தவியாக தவித்து வருகிறார். இடையில் ஏகப்பட்ட பிரச்சனையிலும் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டு வருகிறார்.

பாலிவுட்டுக்கு தஞ்சமடைந்த இயக்குனர்

லிங்குசாமி: குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, பேட்டை என்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துட்டு வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தி வாரியர் என்ற படத்தின் மூலம் இருக்கும் தடம் தெரியாமல் போய்விட்டார்.

சேரன்: பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற குடும்பத்துடன் பார்க்கும் படியான படங்களை கொடுத்து மக்கள் கொண்டாடும் இயக்குனராக பெயர் எடுத்தார். ஆனால் இவருடைய கதை இப்ப இருக்கிற காலகட்டத்திற்கு ஒத்து வரவில்லை என்று சொல்வதற்கு ஏற்ப சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கடைசியாக எடுத்த திருமணம் படத்திற்கு பின் இவருடைய படைப்பை பார்க்க முடியாமல் போய்விட்டது;

விஷ்ணுவர்தன்: இவர் அஜித்துக்கு மிகவும் நெருக்கமானவர், ரத்தமும் சதையுமாக ஒட்டித் திரிந்த இயக்குனர் என்றே சொல்லலாம். ஏனென்றால் அஜித்துக்கு பில்லா என்ற படத்தை ரீமேக் பண்ணி அதன் மூலம் பேரும் புகழையும் எடுத்தார். அஜித்துக்கும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய திருப்புமுனை கிடைத்தது. அதன் பின் இருவரும் சேர்ந்து ஆரம்பம் என்ற படத்தின் மூலம் கூட்டணி வைத்தார்கள்.

கடைசியாக ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை எடுத்தார். ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் பாலிவுட்டுக்கு போய்விட்டார். தற்போது இங்கே இன்னொரு படத்தை எடுக்கலாம் என்று அஜித்திடம் பலமுறை கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் அஜித் எந்தவித பதிலும் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்