ரீ ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் 6 படங்கள்.. புது பட தயாரிப்பாளர்களுக்கு சரவண வேலு வைத்த செக்

6 films lined up for re-release: இப்ப இருக்கிற காலகட்டத்தில் குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தை செலவழிக்க போகும் இடம் தான் திரையரங்கம். ஆனால் அந்த இடத்திற்கு போய் ஒரு மன நிம்மதியுடன் படத்தைப் பார்க்கும் அளவிற்கு தற்போது வருகிற எந்த படமும் அமைவதில்லை. எந்த படத்தை பார்த்தாலும் வெட்டு, குத்து, கொலை, ரத்தவெறி, போதை, கடத்தல் போன்ற வன்மங்களை மட்டுமே காட்டி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இருக்கும் மக்கள் இதற்கு பழைய படங்களை வீட்டில் வைத்து பார்த்து நிம்மதி அடைந்து கொள்கிறோம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அதனால் தான் தற்போது பழைய படத்தை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளில் மக்களை வரவைக்க பிளான் போட்டார்கள்.

அப்படி சில படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டாலும் பெருசாக சொல்லும் படி ரசிகர்கள் வரவில்லை. ஆனாலும் இதையெல்லாம் மாற்றும் விதமாக கடந்த ஒரு வாரமாக திரையரங்குகள் அனைத்தும் திருவிழா மாதிரி கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது தான்.

இப்படி ஒரு மாஸ் ஹீரோவாகவும், ஹியூமர் கலந்த சரவண வேலுவின் நடிப்பை பார்ப்பதற்காகவும் மக்கள் கடலென்ன திரண்டு திரையரங்குகளுக்கு போக ஆரம்பித்து விட்டார்கள். இதனால் பல தியேட்டர்கள் இன்னும் வரை ஹவுஸ்புல் போர்டு மாட்டிக்கொண்டு வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த ஒரு விஷயத்தால் இப்ப வருகிற புது புது படங்களுக்கு தியேட்டர்களில் ஸ்கிரீன் இல்லாமல் தள்ளாடி கொண்டு வருகிறார்கள்.

புது தயாரிப்பாளருக்கு விழும் பெருத்த அடி

அப்படித்தான் இப்பொழுது வந்த ரத்னம் படம் பெரிய அளவில் அடிபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ரீ ரிலீசுக்கு கிட்டத்தட்ட ஆறு படங்கள் தயாராக இருக்கிறது. இந்தியன் மே 30ஆம் தேதி, குஷி மே 19ஆம் தேதி, மங்காத்தா மற்றும் பில்லா படங்கள் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் பண்ணப் போகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, ரன் படங்களும் ரீ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படி பழைய படங்கள் வரிசை கட்டி வருவதால் புதுப்பட தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அடியாக விழப்போகிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்ததே கில்லி சரவணா வேலு தான். ஏனென்றால் இப்படம் கிட்டத்தட்ட 10 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

இப்படி பழைய படங்களுக்கு மவுசு கூட புதுப்படங்களை மக்கள் எட்டிக் கூட பார்க்க வரமாட்டார்கள். இதனால் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்த தயாரிப்பாளர்களுக்கு பெருத்த அடியாக இருக்கப் போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்