
Vijay : அதிர்ஷ்டம் இருந்தால் கூரையை பிச்சுகிட்டு கொட்டும் என்பது போல கில்லி படத்தால் தயாரிப்பு நிறுவனம் நல்ல லாபத்தை பெற்றிருக்கிறது. தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏஎம் ரத்தினம் தயாரிப்பில் உருவாகி இருந்தது கில்லி படம்.
2004 இல் வெளியான படம் 20 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் ரீ ரிலீஸாகி இருக்கிறது. முதல் நாளில் இருந்தே வசூல் மழையில் நனைந்து வருகிறது கில்லி படம். புது படங்கள் கூட இந்த அளவுக்கு வசூலை பெறுமா என்பது சந்தேகம் தான்.
அந்த வகையில் இதுவரை 16 கோடிக்கு மேல் கில்லி படம் வசூல் செய்து உள்ளது. ஆனால் கில்லி படம் செய்த வசூல் எல்லாம் ஏஎம் ரத்னத்திற்கு பத்தாது. இப்போது கில்லி படத்தின் லாபத்தை எடுத்து கடன் தான் கட்டி இருக்கிறாராம்.
கில்லி வசூலால் கடனை அடைத்த ஏ எம் ரத்தினம்
அதாவது 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் தெலுங்கில் பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பாபி தியோல் ஆகியோரை வைத்து உருவாகி வருகிறது ஹரிஹர வீர மல்லு. இந்த படம் 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்திற்காக பத்து நாட்கள் கால்சூட் கொடுத்த பவன் கல்யாண் அதன்பிறகு வேறு படத்திற்கு சென்று விட்டாராம். இப்போது வரை படப்பிடிப்பு நடத்த முடியாமல் ரத்தினம் திணறி வருகிறார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வாங்கிய கடனுக்கு வட்டி என பெரும் தொகை ஏற்பட்டுள்ளது.
இப்போது அதற்கான கடன் மற்றும் வட்டி ஆகியவற்றை கில்லி படத்தின் ரீ ரிலீஸ் மூலமாக ஏ எம் ரத்தினம் கட்டி இருக்கிறார். மேலும் ஹரிஹர வீர மல்லு படம் இழுத்தடித்துக் கொண்டே போவதால் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கவலையிலும் உள்ளார்.