அந்த விவாகரத்து நடிகரை கல்யாணம் பண்ணா நாசமா போயிடுவ.. 40 வயது நடிகையை எச்சரித்த நலம் விரும்பிகள்

நாற்பது வயது மதிக்கத்தக்க நடிகை ஒருவர் பிரபல நடிகரை காதலித்து வந்த காலத்தில் அவரை திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கை வீணாகிவிடும் என பலரும் கூறியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளது ஒன்றும் புதிதல்ல. காதலுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வரும் நடிகர்கள் நடிகைகள் அதிகமான இந்த காலகட்டங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்வதே அரிதாகிவிட்டது.

அந்த வகையில் இந்திய சினிமாவில் மட்டும் அல்லாமல் உலக சினிமாவிலும் பல நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை நல்லபடியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஜோடிகளில் ஒருவர் தான் சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஜோடி.

2012 ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.

சினிமாவில் உச்சத்தில் இருந்த கரீனா கபூர் சைப் அலிகானை காதலிக்கிறேன் என தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் கூறியபோது அவர் மோசமானவர் எனவும், அவரை திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கையே நாசமாகி விடும் எனவும் எச்சரித்தார்களாம்.

அதற்கு காரணம் ஏற்கனவே சைப் அலி கான் என்பவருக்கு திருமணமாகி விவாகரத்து நடைபெற்றதும், அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதும் தான். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கரீனா கபூர் அவரை திருமணம் செய்து கொண்டது சைப் அலிகானை பற்றி தவறாக பேசியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டதாக சமீபத்தில் பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

kareena-kapoor-family
kareena-kapoor-family
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்