Connect with us
Cinemapettai

Cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

40 வருட சினிமா வாழ்க்கையில் மீனாவை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா.? என்ன படம்.?

meena-cinemapettai-1

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் தான் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அது தான் முதல் படம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 40 வருட கால தமிழ் சினிமாவில் மீனாவை அறிமுகப்படுத்தியது சிவாஜி தானாம், மேடை நாடகத்தில் நடிப்பு திறமையை பார்த்து வாய்ப்பு கொடுத்தாராம், இதை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். மீனாவிற்கு இன்று வரை ரசிகர் பட்டாளம் இருந்துதான் வருகிறது. இவர் நடிப்பு திறமைக்காக 1998 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பூர்வீகமாக கொண்ட மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

அந்த குழந்தையும் தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மீனா நடிப்பில் வெளிவந்த எஜமான், சேதுபதி ஐபிஎஸ், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, த்ரிஷ்யம் ஆகிய படங்கள் பல விருதுகளை தட்டிச் சென்றது.

annaatthe-rajini-meena-cinemapettai

annaatthe-rajini-meena-cinemapettai

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த(annaatthe). கடந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Continue Reading
To Top