அஜித்தை திருப்திப்படுத்த முடியாத 4 இயக்குனர்கள்.. மகிழ்திருமேனியால் இழுத்தடிக்கும் ஏகே 62

அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அடுத்தடுத்த படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வருவார். அப்படிதான் சிறுத்தை சிவா, வினோத் ஆகியோருக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுத்து இருந்தார். ஆனால் அஜித்தையே திருப்திப்படுத்த முடியாத அளவுக்கு சில இயக்குனர்கள் உள்ளனர். அவர்களை இப்போது பார்க்கலாம்.

விஷ்ணுவர்தன் : அஜித்தின் கேரியரில் மிகவும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது பில்லா. இந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் இயக்கியிருந்தார். அதன்பின்பு இதே கூட்டணியில் உருவான படம் தான் ஆரம்பம். இந்த படத்தில் அஜித்தை விஷ்ணுவர்த்தனால் திருப்திப்படுத்த முடியவில்லை.

Also Read : அஜித்-ஷாலினியின் 23 வருட உறவு எப்படிப்பட்டது தெரியுமா.? பல ரகசியத்தை உடைத்த மச்சினிச்சி

லிங்குசாமி : குடும்பப்பாங்கான கதைகள் எடுக்கக் கூடியவர் இயக்குனர் லிங்குசாமி. ஹீரோக்களுக்கு வெற்றி படத்தை கொடுத்த லிங்குசாமி அஜித்தின் ஜி படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்து இருந்தது. ஆகையால் மீண்டும் லிங்குசாமியுடன் அஜித் கூட்டணி போடவில்லை.

விக்னேஷ் சிவன் : இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அவ்வாறு அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு சென்றது. ஆனால் விக்னேஷ் சிவனின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்பதால் ஏகே 62 படத்திலிருந்து அவர் விலகி விட்டார்.

Also Read : கன்னத்தோடு கன்னம் வைத்த அஜித், ஷாலினி.. திருமண நாளில் வெளியான ரொமான்டிக் போட்டோ

மகிழ்திருமேனி : அருண் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான மகிழ்திருமேனி அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது வரை அறிவிப்பு வெளியாகாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்கிறது. அஜித் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து வெறுப்படைந்து விட்டனர்.

இதற்கெல்லாம் காரணம் மகிழ் திருமேனி இன்னும் கதையை முழுமையாக தயார் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மீது அஜித் செம அப்சட்டில் இருந்து வருகிறாராம். ஒருவழியாக அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாக இருகிறது.

Also Read : அஜித் சாதனையை பிடிக்க திணறும் சல்மான் கான்.. பட்ஜெட்டில் பாதியை கூட தாண்டாத வீரம் ரீமேக்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்