வயது வித்தியாசம் பாராமல் 335 பெண்களுடன் டேட்டிங் செய்த தனுஷ் பட நடிகர்.. இதுல டாப் ஹீரோயின் வேற இருக்காங்க!

தமிழ் சினிமாவில் பிரபல டான்சரும், நடிகருமான சுந்தர் ராமு பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான 3 மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் தனுஷின் நண்பனாக நடித்து பிரபலமானவர் தான் சுந்தர் ராமு. இவருக்கு ஒரு வித்தியாசமான வாழ்க்கை லட்சியம் உள்ளது.

அதாவது 365 பெண்களுடன் டேட்டிங் செல்வதையே தன்னுடைய இலக்காக கொண்டு வாழ்ந்து வருகிறார் சுந்தர் ராமு. இவர் திருமணமாகி விவாகரத்தானவர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 335 பெண்களுடன் டேட்டிங் செய்துள்ளார்.

இந்தியா, வியட்நாம், ஸ்பெயின், இலங்கை என பல நாடுகளில் உள்ள பெண்களுடன் டேட்டிங் செய்துள்ளார். இதில் 21 முதல் 105 வயது கிழவி வரை டேட்டிங் செய்துள்ளாராம்.

இதுகுறித்து பேசிய சுந்தர், “இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என்னுடைய நோக்கம். என் இலக்கை அடைய இன்னும் 30 பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும்.

நான் பெண்களை மிகவும் கண்ணியமாக நடத்தும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பள்ளியில் கூட ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல் வளர்ந்தேன். ஆனால், வெளி உலகில் நடக்கும் கொடுமைகள் கோபத்தை உண்டாக்குகின்றன” என கூறியுள்ளார்.

மேலும் 2012ஆம் ஆண்டு நிர்பயாவுக்கு நடந்த கொடுமையால் பல நாட்கள் தூக்கமின்றி தவித்ததாகவும் கூறியுள்ள சுந்தர், இதனையடுத்தே பெண்களுடன் டேட்டிங் செல்லும் பழக்கத்தை கையிலெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

dhanush-friend-sundar
dhanush-friend-sundar

இதுமட்டுமின்றி இதுவரை தன்னுடைய பாட்டியுடன் டேட்டிங் சென்றதே மிகவும் ரொமான்டிக்காக இருந்தாகவும், பாட்டியுடன் சேர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்ததாகவும் சுந்தர் கூறியுள்ளார். உங்கள் வாழ்க்கை லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்