2021ல் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட நடிகர்.. ட்ரெண்டாகும் தரவரிசை பட்டியல்!

சினிமா பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சமூக வலைதளங்களை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்களுடைய அன்றாட கருத்துக்களை பதிவிடவும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதும் திரைப் பிரபலங்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

அத்துடன் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளை சோஷியல் மீடியாவில் பின்தொடர்ந்து, அவர்களைப் பற்றி தொடர்ந்து பேசிக் இன்னும் இருக்கின்றனர். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்களின் தரவரிசை பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதில் முதலிடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருடைய பிறந்தநாளன்று தன்னுடைய 65-வது படமான பீஸ்ட் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இவ்வாறு தென்னிந்தியாவில் எக்கச்சக்கமான ரசிகர்களைப் பெற்ற தளபதி விஜய் பற்றி ட்விட்டர் பக்கங்களில் ரசிகர்கள் அதிகமாகப் பேசப்படும் முதல் நபராக உள்ளார். இதை அடுத்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தை மகேஷ்பாபுவும் பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தை தமிழ் நடிகர் சூர்யா பிடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த ஜெய்பீம் படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏகப்பட்ட விமர்சனங்களையும் பெற்றுள்ளது. அத்துடன் சூர்யா கடந்த சில வருடங்களாகவே சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து அதனால் ஏதாவது ஒரு மாற்றம் வருமா? என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்.

top-actor-cinemapettai
top-actor-cinemapettai

மேலும் ஐந்தாவது இடத்தை ஜூனியர் என்டிஆர், ஆறாவது இடத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் பெற்றுள்ளார். அத்துடன் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை காணும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த தரவரிசைப் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

70 வயதைக் கடந்தாலும் இன்னும் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் குறித்து அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கின்றன.

எனவே இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமானது. மேலும் எட்டாவது இடத்தை ராம் சரண், 9வது இடத்தை தனுஷின் பெற்றுள்ளனர். அதைப்போல் 10வது இடம் தல அஜீத்துக்கும் கிடைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்