தமிழ் சினிமா தூக்கி எறிந்த 2 வெற்றி இயக்குனர்கள்.. திரும்பி கூட பார்க்காத ரஜினி, கமல்

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும்தான் தொலைக்காட்சியில் எத்தனை முறை போட்டாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். அப்படி தொலைக்காட்சிகளில் நாம் அதிகம் பார்த்து ரசித்த பல படங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த படையப்பா, பாட்ஷா, முத்து , தசாவதாரம், அண்ணாமலை இது போன்ற பல படங்கள் சொல்லலாம். இப்படிப்பட்ட படங்கள் எத்தனை காலமானாலும் 90கிட்ஸ் களின் மனதிலிருந்து நீங்கவே செய்யாது.

இப்போது திரையரங்குகளில் மறுவெளியீடு என்றால் கூட தியேட்டர்கள் நிரம்பி வழிவதற்கு இதுதான் காரணம். ஆனால், இந்தப் படத்தைப் பற்றி சிந்திக்கும் நாம் இந்த படங்களை கொடுத்த முக்கிய இரு இயக்குனர்களைப் பற்றி யோசித்தது இல்லை . அப்படி வெற்றி இயக்குனர்களாக எப்போதும் வலம் வரக் கூடியவர்கள் தான் கேஎஸ். ரவிக்குமார் மற்றும் சுரேஷ் கண்ணா.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் என்றும் காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷ படமாக பல படங்கள் வெளியாகி இருக்கின்றது. அந்த சமயத்தில் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து, பல வசூல் சாதனைகளை முறியடித்து அனைத்து இயக்குனர்களின் மூக்கிலும் விரலை வைக்கும் அளவிற்கு பல வெற்றி படங்களை கேஎஸ்.ரவிக்குமார் கொடுத்திருக்கிறார்.

அதில் முக்கியமாக அவ்வை சண்முகி,முத்து,படையப்பா தசாவதாரம் போன்ற முக்கியமான படங்களை ரஜினி மற்றும் கமலுக்காக இவர் இயக்கியும் இருக்கிறார். அதேபோல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா, அண்ணாமலை கமலுக்காக ஆளவந்தான் சத்யா போன்ற பல படங்களை எடுத்திருக்கிறார். இவர் எடுத்த அத்தனை படங்களும் வசூல் சாதனை மட்டுமின்றி இன்று தியேட்டர்களில் மறுவெளியீடு செய்தால்கூட ஹவுஸ்புல்லாகும் நிலையில், திரையரங்குகள் திணறும் அளவிற்கு கூட்டம் கூடுகிறது. இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அதிகமாக ரஜினி கமலை வைத்து தான் படம் எடுப்பார்கள்.

அப்படி இவர்கள் படங்கள் எடுக்கும் நேரத்தில் , தமிழ் சினிமாவின் மிக உயரிய இடத்தில் இருக்கும் இயக்குனர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து இருந்தனர். ஆனால், தற்போது சினிமாவில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கின்றனர். முன்பு இயக்கியதைப் போல தற்போது படங்களை இயக்கவில்லையே என்று அவர்களிடம் கேட்கும் போது, அப்போது அந்த காலத்தில் இருந்த டிரென்ட் வேறு, இப்போது இந்த காலத்தில் இருக்கக்கூடிய டிரென்ட் வேறு, இப்படி மாறிவிட்டதால் இவர்களால் ரஜினி மற்றும் கமலை தற்போது பழையபடிக்கு இயக்க முடியவில்லை. அவர்களும் இவர்களை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பும் ரஜினி மற்றும் கமல் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் என இளம் இயக்குநர்களை தேடி சென்று விட்டனர். இதனால் தங்களை தமிழ் நெஞ்சங்களின் மனதில் பதிய வைத்த கேஎஸ்.ரவிக்குமார் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா போன்ற இயக்குனர்களிடம் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தற்போது செல்வதில்லை.

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இயக்குனர்கள் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தாலும், நிதர்சனத்தில் அது நடக்கத்தான் செய்யும். காலத்திற்கு ஏற்றார் போல் காலச்சக்கரம் மாற்றி மாற்றி ஒவ்வொருவராக உச்சத்தில் ஏற்றி பின் இறக்கும்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்