கமலை வைத்து இயக்கப் போகும் 2 இயக்குனர்கள்.. அப்ப சண்டை கன்ஃபார்ம்

கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விக்ரம் படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. எனவே உலக நாயகன் கமலஹாசன், விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்த படம் யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர்களை மகிழ்விக்கும் இடத்தில் கமலஹாசன் அடுத்ததாக இயக்குனர் முத்தையா உடன் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில், அருடைய டைரக்ஷனில் கமலஹாசன் தயாரிப்பதாக அறிவித்தார். அதில் விஜய் சேதுபதி ஹீரோ. ஆகையால் விக்ரம் படத்தை தொடர்ந்து கமலஹாசன் அட்டக்கத்தி, பரியேறும் பெருமாள், சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கிய பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால் பா ரஞ்சித், முதல் முதலாக கமலஹாசனை வைத்து இயக்கும் இந்தப் படத்தை குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அடுத்து தனுஷின் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இது நல்ல கூட்டணி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இப்படம் அரசியலை வைத்து உருவாக உள்ளது. மேலும் அரசில் நடக்கும் ஊழல்கள் எப்படி, அரசியல்வாதிகள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேறு எந்த நடிகர்களும் இந்த கதைக்களத்தை கொண்ட படத்தில் நடிப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் கமலஹாசன் அப்படி அல்ல. சினிமாவின் சீனியர் ஆகவும், தற்சமயம் அரசியலில் பிரவேசம் செய்து கொண்டிருக்கும் கமலஹாசனுக்கு இந்தப் படம் சரியாக பொருந்தும்.

ஆகையால் அவர் மூலமே இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் மாரி செல்வராஜ், பா ரஞ்சித் கமலிடம் கூட்டணி சேர்ந்துள்ளார். இது வரவேற்கத்தக்க கூட்டணி. இனிமேல் கமல் நகர்த்தும் காய் சினிமாவின் மூலம் அரசியலில் என்ன புதுமைகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -