16 வயதினிலே படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம்.. ரஜினியை விட கமலுக்கு 8 மடங்கா

1970 களின் தொடக்கத்தில், அழகான கதாநாயகி,சிகப்பான நல்ல உடல் தோற்றம் உடைய கதாநாயகன். காதல் பாடல், மிடுக்கான நல்ல குடும்ப திரைக்கதை, மிரளவைக்கும் சண்டை காட்சி, இதுதான் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் ஆக இருந்தது. இது அனைத்தும் 1977ஆம் ஆண்டு, 16 வயதினிலே என்ற படம் வருவதற்கு முன்னால் இருந்த டெம்ப்ளேட் ஆகும்.

பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் வெளியான படம் தான் 16 வயதினிலே. இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாகவும் தங்கள் கதாபாத்திரங்களை அறிந்து நடித்ததால் தான் இந்தக் கதாபாத்திரங்கள் காலம் கடந்தும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அன்றைக்கு இதில் நடித்த நடிகர்கள் யாரும் மிகப்பெரிய நடிகர்களாக இருக்க வில்லை. அதனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளமும் நாம் நினைக்கும் அளவிற்கு மிக அதிகமாகவும் இல்லை. அப்படி அதில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ரஜினிகாந்த்: பரட்டை எனும் கதாபாத்திரத்தில் அந்த படத்தில் வில்லன் தோற்றத்தில் நடித்திருப்பார் நடிகர் ரஜினிகாந்த். இது எப்படி இருக்கு என்ற டயலாக் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரட்டை எனும்பெயர் மூலம் அழைக்கப்பட்ட ரஜினிகாந்த், இப்போது போல் மிகப்பெரிய புகழ் பெற்ற நடிகராக அப்போது இருக்கவில்லை . அதனால் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் மூன்றாயிரம் ரூபாய் மட்டுமே. அவர் வாங்கிய சம்பளம் குறைவு என்றாலும் அந்த படத்தில் அவருக்கான கதாபாத்திரம் அவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

கமல்ஹாசன: இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த கமல்ஹாசன் சப்பாணி என்னும் கதாப்பாத்திரத்தில் அன்றைய மாஸ் ஹீரோக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத தோற்றத்தில் வெறும் கோமணம் கட்டிக்கொண்டு படத்தின் பாதிக் காட்சிகளில் நடித்து இருப்பார். அவர் அப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்ககளில் ஒருவராக இருந்தார். அதனால் அவர் அந்த படத்திற்கு வாங்கிய சம்பளம் 27000 ரூபாய். நடிப்பிலும் சரி, மேக்கப்பிலும் சரி நிஜத்தில் சப்பாணி என்னும் அந்த ஒரு கதாப்பாத்திரத்தை கண் முன்னே காட்டி இருப்பார் இயக்குனர் பாரதிராஜா.

ஸ்ரீ தேவி: மயிலு மயிலு என்று அந்தப்படம் முழுக்க மயில் என்னும் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும். 16 வயதினிலே என்னும் படத்தலைப்புக்கு ஏற்றவாறு கொஞ்சும் மொழியில் பேசி ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து இருப்பார். இந்தப்படத்திற்கு பிறகு இளைஞர்களுக்கு மத்தியில், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த படத்திற்காக இவர் வாங்கியச் சம்பளம் 9000 ரூபாய். ஸ்ரீ தேவி அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கவுண்டமணி: காமெடிக் கதாபாத்திரங்களில் நடித்து வளர்ந்து வரக்கூடிய நேரத்தில் நடிகர் கவுண்டமணிக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பரட்டையாக நடித்த ரஜினிகாந்திற்கு வலது கையாக, இந்த படத்தில் வரும் கவுண்டமணி அவ்வப்போது தனது வில்லத்தனத்தையும், காமெடி கவுண்டர் வசனங்களையும் அள்ளி வீசி இருப்பார். அதுவும் ரஜினி,கமல் , கவுண்டமணி என மூன்று பேரும் ஒன்றாக தோன்றிய ஒரு காட்சி அவ்வளவு அருமையாகவும் இன்று பார்த்தாலும் சலிக்காத அளவிற்கும் இருக்கும். இந்த படத்திற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்.

காந்திமதி: குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடிக்க கூடிய நடிகை காந்திமதி. இவர் நளினத்தோடு வசனம் சொல்லும் அழகே தனியாக தெரியும். ஒரு காலத்தில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்த இவர் அதன்பின் அம்மா வேடம் அக்கா வேடம் என்று காலத்துக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டார். அப்படிப் பல கதாநாயகிகளின் அம்மாவாகவும், அக்காவாகவும் நடித்த இந்த காந்திமதி இந்தப் படத்தில் ஸ்ரீதேவிக்கு அம்மாவாக நடித்து இருப்பார்.. மிகச் சிறப்பான நடிப்பை இந்த படத்தில் அவர் வெளிப்படுத்தி இருப்பார்.இந்த படத்திற்காக நடிகை காந்திமதி வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்.

சபீர் அகமது: உண்மையிலேயே இந்த படத்தில் யார் ஹீரோ என்று கேட்டால் நாம் யாரை கை காட்டுவது என்று குழப்பமாகத்தான் இருக்கும்..அப்படி ஒரு நடிப்பை அத்தனை நடிகர்களும் அந்த படத்திற்காக தந்திருப்பார்கள் . அதில் மிக முக்கியமாக ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடத்தைப் பிடித்து சிறிது நேரம் வந்தாலும் யாருப்பா இந்த டாக்டர் என்று கேட்கும் அளவிற்கு டாக்டர் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார் நடிகர் சபீர் அகமது. இந்த டாக்டர், மயிலிடம் செய்யும் குறும்புகளும்,செய்யும் சில்மிஷங்களும் நிறைந்த காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இயக்குனர் பாரதிராஜா இந்த கதாப்பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்து இருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடித்த சபீர் அகமது இந்த படத்துக்காக வாங்கிய சம்பளம் 250 ரூபாய் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்