வலிமை படத்தில் எத்தனை சென்சார் கட் தெரியுமா? இல்லனா ‘A’ சர்டிபிகேட்தான்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக வலிமை திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படம் குறித்து பல சலசலப்பு மற்றும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இதனால் விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் பல அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்திற்கு தணிக்கை குழு யு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும் படத்தில் 15 இடங்களில் சில திருத்தங்களை செய்ய சென்சார் குழு படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர சில சர்ச்சைகளை ஏற்படுத்தும் வார்த்தைகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனால் அந்த வார்த்தைகள் ஒலிக்கும் போது அதை மியூட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தவிர படத்தில் சில வன்முறை காட்சிகள் இருப்பதால் அந்த காட்சிகள் வரும் பொழுது அதற்கு மறுப்பு செய்திகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3 மணி நேரம் பத்து நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தில் சில சர்ச்சையான காட்சிகளை நீக்கிவிட்டு தற்போது படம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடும் படி தயாராகியுள்ளது. மேலும் படத்தில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், சில குறிப்பிட்ட வார்த்தைகளையும் தணிக்கை குழு நீக்கியுள்ளது.

குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டாலும் நிச்சயம் படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்காக இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இந்த வலிமை திரைப்படம் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேல் சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்