ரஜினி பெயரில் 15 கோடி மோசடி.. இருக்குற பிரச்சனைல இவனுங்க வேற! வேதனையில் தலைவர்

மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streams Corporation) என்கிற நிறுவனம் தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருகிறது. கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது.

அந்த நிறுவனத்தை அணுகி ரஜினியின் பேட்ட, தனுஷின் ‘நான் ருத்ரன்’, ராகவா லாரன்ஸின் காஞ்சனா-3 போன்ற படங்களின் பதிப்புரிமை தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்காக கிட்டத்தட்ட 30 கோடி வரை தொகை கைமாறி உள்ளது.

ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்பது தெரியவந்துள்ளது , ஆகையால் அந்த நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து அப்போதைக்கு சமாளித்துள்ளார் முரளி.

அதன்பின்னர் ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்பதும் தங்களை மோசடியாக ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து முரளி ராமசாமியிடம் கேட்டபோது, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாது என அலட்சியமாகவும் பதிலளித்துள்ளார். ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் என்னை மீறி உங்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை மூலம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது தமிழ் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்