105 வயதில் பத்மஸ்ரீ விருது.. பாப்பம்மாள் பாட்டியின் வாழ்க்கையை படமாக்கும் பிரபல இயக்குனர்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற வள்ளுவரின் வார்த்தை கிணங்க தளராத வயதிலும் பாப்பம்மாள் விவசாயம் செய்து வருகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊரில் வசிக்கும் 105 வயதான மூதாட்டி பாப்பம்மாள்.

தனது சிறுவயது முதலே அவரின் இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் பாப்பம்மாள். தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினர் மகளிர் சங்கத் தலைவி என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பாப்பம்மாள் கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்து வருகிறார்.

இந்த வயதிலும் ஆரோக்கியமான உணவு அரசியல் எனப் பல துறைகளில் பட்டையை கிளப்புகிறார் பாப்பம்மாள். தன்னுடைய 105 வயதிலும் தளராது இயற்கை விவசாயம் செய்து வருவதால், இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் பாப்பம்மாள் பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டியின் கையைப் பிடித்து பணிவுடன் வணங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.இயக்குனர் சேரன் அவர்கள், இந்த தள்ளாத வயதிலும் வேளாண்மைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மத்திய அரசு வழங்கிய உரிய விருதுகளை பெற்ற தகுதியான சிலரில் பாப்பம்மாள் அம்மா முதலானவர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாப்பம்மாள் விருது வாங்கும் வீடியோவுடன் பதிவிட்டிருந்தார். சேரன் இந்த பாட்டியின் வாழ்க்கையை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான முயற்சியில் அவர்  இறங்கி இருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.  ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்