100வது படத்தின் போது உயிரை விட்ட ஒரே பிரபலம்.. 46 வயதில் நடந்த சோகம்!

100 படங்களுக்கு மேல் நடித்து வெற்றி கண்ட பிரபலங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம் அதிலும் 100வது படத்திற்காக மெனக்கிட்டு கதை தேர்வு செய்வதில் இருந்து படம் வெளிவரும் வரை நுணுக்கமாக கையாள்வார்கள் நடிகர்கள்.

இந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமராஜன், கமலஹாசன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எவ்வளவு படங்கள் நடித்தாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது ரசிகர்கள் தான்.

தமிழ் சினிமாவில் 99 படங்கள் நடித்த 100வது படத்தின் போது உயிரைவிட்ட ஒரே பிரபலம் யார் என்றால் முரளி தானாம். 1984-ல் பூவிலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முரளி.

பின் மணிரத்தினம் இயக்கத்தில் பகல் நிலவு என்ற படத்தில் ரேவதிக்கு ஜோடியாக நடித்திருப்பார். கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த சின்ன பசங்க நாங்க, மணிகுயில், மஞ்சுவிரட்டு, அதர்மம், என் ஆசை மச்சான், பூமணி போன்ற படங்கள் பிரம்மாண்ட வெற்றி கொடுத்தது.

ரொமான்டிக் படமான காலமெல்லாம் காதல் வாழ்க மற்றும் போர்க்களம் பிளாக்பஸ்டர் வசூல் சாதனை படைத்தது. இன்று வரை இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் இதயம். இந்த படத்தில் உருகி உருகி காதல் செய்யும் முரளியின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர் மகன் அதர்வா நடித்த முதல் படமான ‘பாணா காத்தாடி’-யில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அது தான் முரளி நடித்த 99வது படம், அதற்குப் பின்னர் 100வது படம் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீர் மரணம் அடைந்து விட்டதால் ‘கவசம்’ என்ற படம் டிராப் செய்யப்பட்டது.

atharvaa-murali-cinemapettai
atharvaa-murali-cinemapettai

இப்படி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் 46 வயதில் திடீரென்று மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்