இந்த 5 படத்தையும் பிடிக்கலைன்னு சொல்றவங்க இருக்கவேமாட்டாங்க.. அதுலயும் 5வது படம் எல்லாருக்குமே பேவரைட்

தமிழ் சினிமாவில் உருவாகும் சில படங்கள் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களையும் தாண்டி அனைவரது மனதையும் கவர்ந்து விடும். அந்த படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

பஞ்சதந்திரம்: கேஎஸ் ரவிக்குமார் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படம் காமெடி பஞ்சமே இல்லாமல் உருவாகியது. இந்த படத்தை இன்றும் டிவியில் பார்க்க பலபேர் இருக்கின்றனர். அதிலும் உடன் நடித்த ஜெய் ராம், ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், யூகி சேது ஆகியோர் ஒரு பக்கம் காமெடியில் கலக்க, இன்னொரு பக்கம் சங்கவி, ஊர்வசி, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் என படம் மொத்தமும் கலகலப்பாக இருக்கும்.

சிவாஜி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் சிவாஜி. பக்கா மாஸ் கமர்சியல் படமாக இருந்தாலும் சிவாஜி படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஒரு எண்டர்டெயின்மெண்ட் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த படம் அமைந்தது. இந்த படத்தை பிடிக்கவில்லை என்று சொல்கிற ரசிகர்கள் இல்லை.

அயன்: சூர்யாவின் வேறு ஒரு பரிமாணத்தில் அசத்தலாக வெளிவந்து அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் அடித்து நொறுக்கிய திரைப்படம் அயன். கே வி ஆனந்த் இயக்கிய இந்த திரைப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. அதுமட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்த பட லிஸ்டில் இந்த படமும் இணைந்தது.

சுந்தரா டிராவல்ஸ்: படம் முழுக்க கொஞ்சம்கூட சலிப்படைய வைக்காத காமெடி காட்சிகளை வைத்து செம என்டர்டெயின்மென்ட் படமாக உருவானதுதான் சுந்தரா டிராவல்ஸ். முரளி மற்றும் வடிவேலு கூட்டணியில் பட்டையை கிளப்பிய திரைப்படம். இந்த படத்தை இப்போது டிவியில் போட்டாலும் இதை பார்க்க தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கில்லி: விஜய் திரிஷா கூட்டணியில் தரணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றியை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் அதற்கு முன்னர் செய்த வசூலையெல்லாம் இந்த படம் முறியடித்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூல் செய்த படமாகவும் மாறியது. விஜய்யை வெறுப்பவர்களுக்கும் அவரை பிடிக்க வைக்கும் படமாக அமைந்தது கில்லி.

இதேபோல் வாலி, யூத், குஷி, அன்பே சிவம், கலகலப்பு என மேலும் சில படங்கள் ரசிகர்களின் பேவரைட் படமாக இருக்கிறது. இந்த படங்கள் தனி ஒரு நடிகரின் ரசிகர்களையும் தாண்டி ஒவ்வொரு ரசிகரின் மனதிலும்ஆழமாக அமர்ந்த படங்களாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்