இளம் இயக்குனரை கடுப்பேற்றும் தனுஷ்.. வாய்ப்புக் கொடுத்து விட்டாரே என்று பேசாமல் இருக்கிறாராம்!

சமீபகாலமாக தனுஷ் நடவடிக்கைகள் எதுவும் யாருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல்தான் இளம் இயக்குனர் ஒருவர் தற்போது தனுஷ் மீது செம கடுப்பில் இருப்பதாக வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதில் ஒன்று கார்த்திக் நரேன் இயக்கும் மாறன்.

இன்னொன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம். பேருக்குதான் கார்த்திக் நரேன் மற்றும் மித்ரன் ஜவஹர் இருவரும் இயக்குனர்களாக இருக்கிறார்களாம்.

ஆனால் தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டு வந்ததால் தனுஷ் அநியாயத்திற்கு இயக்குனர்களின் இயக்க விஷயத்தில் தலையிட்டு வருவதாக கூறுகின்றனர். இந்த காட்சியை இப்படி எடுக்க வேண்டும், அந்தக் காட்சியை அப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து இயக்குனர்களை டார்ச்சர் செய்து வருகிறாராம்.

ஒரு கட்டத்தில் இயக்குனர்களை ஓரம்கட்டி உட்கார வைத்துவிட்டு இவரே படத்தை இயக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் கடுப்பான கார்த்திக் நரேன் யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் கார்த்திக் நரேன் இயக்கிய ப்ராஜெக்ட் அக்னி என்ற படம் மட்டும் தான் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அப்படி இருக்கையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் ஏன் தலையிடுகிறார்? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

dhanush-karthik-naren-cinemapettai
dhanush-karthik-naren-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்