Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu
அந்த நடிகருடன் ஒரே படம்தான்.. புடிச்ச புடியில் மீண்டும் அவருடன் நடிக்க மாட்டேன் என அலறும் நடிகை
பெண்களின் தேசமான பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்தவர்தான் அந்த பிரபல நடிகை. வந்த புதிதிலேயே பிரபல நடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது அந்த நடிகருடன் ஆயிரம் படவாய்ப்பு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம்.
நம்ம ஊர் நடிகைகளை விட பக்கத்து மாநில நடிகைகளுக்கு நம்ம பசங்க மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். பார்ப்பதற்கு வெள்ளையாக கொழுக் மொழுக் என்று இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது.
பக்கத்து மாநிலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த இளம் நடிகை தமிழ் சினிமாவில் பிரபல நடிகருடன் ஒரே ஒரு படம்தான் நடித்தார். அதை படம் முதலுக்கு மோசம் இல்லை என்கிற அளவுக்கு ஓரளவு வெற்றி பெற்றது.
ஆனால் அந்த படத்தில் பணியாற்றும்போது அந்த நடிகரின் சேட்டைகள் தாங்க முடியவில்லையாம். ரொமான்ஸ் காட்சிகளில் வேண்டுமென்றே தடவல்கள் அதிகமாக இருந்ததாம். இதனால் அப்போது அந்த நடிகை ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் அந்த படத்தை நடித்து முடித்தாராம்.
இப்போது தமிழ் சினிமாவில் அந்த நடிகருக்கு ஒரு நல்ல பெயர் இருப்பதால் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள் என நினைத்து பேசாமல் சொந்த ஊரிலேயே இருந்து விடுவோம் என பக்கத்து மாநிலத்திலேயே நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கிடையில் அந்த நடிகர் தன்னுடைய தயாரிப்பாளரை அனுப்பி சில படங்களில் ஜோடியாக நடிக்க கேட்டாராம். அந்த நடிகரின் எண்ணம் தெரிந்த அந்த நடிகை ஆள விடு சாமி என ஓட்டம் பிடித்து விட்டாராம். மேலும் இனிமேல் அந்த நடிகரின் படத்தில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
