Connect with us
Cinemapettai

Cinemapettai

yogi babu natarajan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யார்க்கர் நடராஜனுக்கு பரிசு கொடுத்த யோகிபாபு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இதன் பின்னரே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து கூர்கா, மண்டேலா, ஜாம்பி என சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக உருவெடுத்துள்ளார்.

இவரைப் போலவே இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் தான் தமிழக வீரர் நடராஜன். இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது தமிழர்களுக்கு பெருமைப்படும் விஷயமாக மாறியுள்ளது.

natarajan yogi babu

natarajan yogi babu

இந்நிலையில், நடராஜனும், யோகி பாபுவும் சமீபத்தில் ஒரு உணவகத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் வீரரை காமெடி நடிகர் ஏன் சந்திக்க வேண்டும் என உங்களில் பலருக்கு கேள்வி எழுந்திருக்கலாம். அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. யோகி பாபுவை காமெடி நடிகராக மட்டுமே நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் அவர் ஒரு புட்பால் பிளேயர். பள்ளிப் பருவத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் யோகி பாபு பங்கேற்றுள்ளார். பின்னர் சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்து விட்டார்.

மனுஷன் இது மாதிரி இன்னும் எத்தனை திறமைகளை ஒளிச்சு வச்சு இருக்காருனு தெரியலையே….

Continue Reading
To Top